80,000 போலீஸ் 4 நாளாக தேடியுமா பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் சிக்கலை? விளாசிவிட்ட பஞ்சாப் ஹைகோர்ட்
அம்ரித்பால் சிங் விவகாரத்தில் பஞ்சாப் அரசை விளாசியுள்ளது மாநில உயர்நீதிமன்றம்.
சண்டிகர்: தப்பி ஓடிய பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை 4 நாட்களாக 80,000 போலீசார் தேடியுமா பிடிக்க முடியவில்லை என பஞ்சாப் மாநில அரசை பஞ்சாப் உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
சீக்கியர்கள் ஒரு தனி தேசிய இனம்; இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் நிலப்பரப்பை ஒருங்கிணைத்து ஐநா வரையறை செய்துள்ள சுய நிர்ணய உரிமையின் கீழ் காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும்- இதுதான் பஞ்சாப் பிரிவினைவாதிகள் முழக்கம்.

1980களில் பிந்தரன்வாலே என்ற பயரங்கரவாதி இந்த காலிஸ்தான் தனி சீக்கியர் நாடு முழக்கத்தை முன்வைத்து நமது மத்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தினார். பிந்தரன்வாலேயின் இந்த ஆயுத கிளர்ச்சிக்கு அடைக்கலம் தந்தது சீக்கியர்களின் புனிததலமான பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில். இதனால் பொற்கோவிலுக்குள் ஆபரேஷன் ப்ளூஸ்டார் மூலம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பினார். இந்த மோதலில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட 1000க்கும் அதிகமான தனிநாடு கோரிய போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிந்தரன்வாலே படுகொலைக்கு பழிவாங்கவே சீக்கியர் பாதுகாவலர்களால் பிரதமராக இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் பயங்கரவாதிகளில் எஞ்சியவர்கள் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா என
பல நாடுகளில் அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் காலிஸ்தான் கோரிக்கைக்கான இயக்கங்களை நடத்தி வந்தனர்.
இதன் ஒரு பகுதிதான் வாரிஸ் பஞ்சாப் டி. இந்த அமைப்பு இந்தியாவிலும் கால்பதித்து மீண்டும் பஞ்சாப் தனிநாடு கோரிக்கையை பிரசாரம் செய்தது. இதன் தலைவர் அம்ரித்பால் சிங், பஞ்சாப் அரசுக்கும் மத்திய அரசுக்கும் சவாலாக உருவெடுத்திருக்கிறார். வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பினர் மீது பஞ்சாப் போலீசார் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றனர். அஜ்னாலா காவல்நிலையத்தை ஆயுதங்களுடன் வாரிஸ் பஞ்சாப் டி செயற்பாட்டாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வாரிஸ் பஞ்சாப் டி இயக்கத்தினருக்கு எதிராக பஞ்சாப் போலீசார் நடவடிக்கை தீவிரமானது. மேலும் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அம்ரித்பால் சிங் போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. அத்துடன் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை கடந்த 4 நாட்களாக பஞ்சாப் போலீசார் தேஇ வருகின்றனர். இதனிடையே அம்ரித்பால் சிங் தொடர்பான வழக்கு பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது பஞ்சாப் மாநிலத்தின் 80,000 போலீசார் 4 நாட்களாக தேடியுமா அம்ரித்பால் சிங் கிடைக்கவில்லை? இது தொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications