பகவந்த் மானுக்கு பொசுக்குனு கோபம்..பஞ்சாப் பள்ளியில் பஞ்சாபி கட்டாயம்! தெலுங்கானாவுக்கும் வந்த ரோஷம்
சண்டிகர்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சில மாநில மொழிகள் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டுள்ளதுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து, பஞ்சாபிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடக்கும் நிலையில் அதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வு ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்சி கல்வி தொடர்பான விதிமுறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில விதிமுறைகள் மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது போல இருப்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்தும் மத்திய அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற வேண்டும். ஆனால் புதிய நடைமுறை மூலம் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழை தற்போது பெறத் தேவையில்லை.
இதேபோல் சிபிஎஸ்சி வரைவு பாட திட்டத்தின் கீழ் பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எடுத்து அங்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில் தான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதலமைச்சரான பகவந்த் மான். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி தேர்வு வரைவு பாடத்திட்டத்தில் இருந்து பஞ்சாபி நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில்தான் இந்த அதிரடி அறிவிப்பு வந்திருக்கிறது. முன்னதாக பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரான ஹர்ஷத் பெயிண்ஸ் பஞ்சாபி மொழியை ஒரு பாடமாக சேர்க்காத எந்த ஒரு பள்ளிக்கும் அல்லது கல்வி நிறுவனத்திற்கும் பஞ்சாப் மாநிலத்தில் அங்கீகாரம் மறுக்கப்படும் என கடுமையாக எச்சத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தெலுங்கானாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயம் ஆக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மற்றி அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் சில மாநிலங்கள் முன்மொழிக் கொள்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது தெலுங்கானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அவர்களது தாய் மொழியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளன. தமிழ்நாட்டிலும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications