Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலிஸ்தான் பயங்கரவாதி 'கனடா' கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாபில் 1,000 இடங்களில் மெகா வேட்டை!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் தயங்கரவாதியும் நிழல் உலக தாதாவுமான கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாருக்கு குடியுரிமை தந்தது கனடா. தீவிரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்ர். இதற்கு இந்தியாவே காரணம் என கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா- கனடா இடையேயான உறவில் மோதல் உருவாகி உள்ளது.

Punjab Police conduct raid at 1000 locations associated with gangster Goldy Brar

முறியும் இந்தியா- கனடா உறவு: கனடாவில் இருந்து இந்தியாவின் தூதரக அதிகாரியை அந்நாட்டு முதலில் வெளியேற்றியது. இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்தது. இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி நாட்டில் வெளியேற உத்தரவிடப்பட்டது. தற்போது கனடா நாட்டவருக்கான விசா வழங்குவது காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், கனடா வாழ் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

பஞ்சாப் போலீஸ் அதிரடி: இந்த பதற்றமான சூழ்நிலையில் கனடாவுக்கு சென்று காலிஸ்தான் தீவிரவாதி ப்ளஸ் நிழல் உலக தாதாவாக உருவான கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மாநில போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

யார் இந்த கோல்டி பிரார்?: பஞ்சாப் மாநிலம் ஶ்ரீமுக்த்ஸார் சாகிப் என்ற இடத்தை பூர்வீகாமக் கொண்டவர். 2017-ம் ஆண்டு கனடாவுக்கு மாணவர் விசாவில் படிக்க சென்றார். கனடாவில் செயல்பட்டு வந்த சமூக விரோத கும்பலான லாரன்ஸ் பிஷோனி கும்பலில் இணைந்தார். இதன் பின்னர் அப்படியே காலிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களிலும் இணைந்து செயல்பட்டார் கோல்டி பிரார். பஞ்சாப் பாடகார் சித்து மூஸ்வாலா படுகொலையில் கோல்டி பிராருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

1,000 இடங்களில் சோதனை: பஞ்சாப் மாநிலத்தின் மோகா, ஃபெரோஸ்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அம்மாநிலம் முழுவதும் நடத்தப்படும் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி தார்செம் மாஷிக் கூறுகையில், மாநிலத்தில் உள்ள நிழல் உலக தாதாக்களை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சோதனைகள் நடைபெறுகின்றன என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+