இதுதாங்க அதிர்ஷ்டம்.. லாரி டிரைவரை கோடீஸ்வரராக மாற்றிய லாட்டரி! பரிசு தொகையை கேட்டா அசந்துபோவீங்க
சண்டிகர்: குவைத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வரும் பஞ்சாப்பை சேர்ந்தவருக்கு அந்த மாநில அரசின் லாட்டரி குலுக்கலில் ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால் ஒரேநாளில் லாரி டிரைவரில் இருந்து கோடீஸ்வரராக அவர் மாறி உள்ளார். இருப்பினும் பரிசு விழுந்த பிறகு அவர் சொன்ன வார்த்தை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏமாந்து போனதால் லாட்டரி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் தான் பஞ்சாப்பிலும் லாட்டரி நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த லாரி டிரைவர் தொடர்ந்து லாட்டரி வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் மனம் தளராத அவருக்கு தற்போது ‛ஜாக்பாட்டாக' பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது.
அதாவது பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டம் பர்வா கிராமத்தை சேர்ந்தவர் ஹர்பிந்தர் சிங். இவர் குவைத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பஞ்சாப் அரசு சார்பில் டியர் லோஹ்ரி மகர் சங்கராந்தி பம்பர் 2025 லாட்டரி விற்பனை செய்யப்பட்டது.
இந்த லாட்டரியில் ஒன்று ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த லாட்டரியின் அதிகபட்ச பரிசுத்தொகை என்பது ரூ.10 கோடியாகும். பஞ்சாப்பில் அதிகபட்ச பரிசுத்தொகை வழங்கும் ஒரே லாட்டரி குலுக்கல் இதுதான். இதனால் போட்டி போட்டு ஏராளமானவர்கள் லாட்டரியை வாங்கினர். அப்படி அதிர்ஷ்டத்தை நம்பி குவைத்தில் லாட்டரி வாங்கிய நபர்களில் ஒருவர் தான் ஹர்பிந்தர் சிங்.
குவைத்தில் லாரி டிரைவாக உள்ள அவர் ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும் லாட்டரி வாங்குவார். அப்படித்தான் இந்த முறையும் லாட்டரி வாங்கினார். இந்த லாட்டரி குலுக்கல் என்பது கடந்த 18 ம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ஹர்பிந்தர் சிங்கிற்கு விழுந்தது. லாரி டிரைவரான அவர் ரூ.10 கோடி வென்றார். இதனால் ஒரே நாளில் ஹர்பிந்தர் சிங் கோடீஸ்வரராக மாறி உள்ளார். இதனால் அவரது குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது.
இதுபற்றி ஹர்பிந்தர் சிங் கூறுகையில், ‛‛ என்னுடைய அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.கடவுளின் அருளால்தான் இவ்வளவு பெரிய தொகையை வென்றுள்ளேன். ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது லாட்டரி வாங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். இப்போது பெரிய தொகையை வென்றுள்ளேன்.
நான் குவைத்துக்கு கடன் வாங்கி தான் சென்றேன். இந்த கடனை அடைப்பேன். அதேபோல் எனது மகன் தேவேந்திர சிங்கின் இடது கை விபத்தில் பறிபோனது. என் மகனுக்கு தேவையான மருத்துவ உதவிக்கு இந்த பணத்தை செலவு செய்வேன். அதோடு அவன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்கி கொடுக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று உருக்கமாக கூறினார்.
தற்போது ரூ.10 கோடி வென்றுள்ள ஹர்பிந்தர் சிங்கிற்கு அப்படியே மொத்த தொகையும் கிடைக்காது. பரிசுத்தொகையான ரூ.10 கோடியில் வருமான வரி உள்பட பிற வரிகள் என்று மொத்தம் 30 சதவீதத்தை அரசு பிடித்து கொள்ளும். அதேபோல் ஹர்பிந்தர் சிங்கிற்கு லாட்டரி விற்ற விற்பனையாளர் ஹேமந்த் கக்காருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். இதுதவிர இன்னும் சில லட்சங்களை போக மீதம் சில கோடிகள் ஹர்பிந்தர் சிங்கிற்கு கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications