ஹரியானா தேர்தல்.. பெண்களுக்கு மாதம் 2,000.. பென்சன் 6 ஆயிரம்.. அள்ளிக் கொடுக்கும் காங்கிரஸ்
சண்டிகர்: ஹரியானா மாநிலம், சட்டமன்ற தேர்தல் வருகிற அக்டோபர் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பலத்த வியூகங்களை வகுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே பஜிரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஹரியானாவுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதை பான், ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புதுப்பேந்தர் சிங் ஹூடா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டத் தலைவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ஏழு வாக்குறுதிகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

அதில் முதன்மையானதாக குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வமான உறுதி, சாதி ரீதியான கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளனர். அதேபோல பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமூக பாதுகாப்பை பலப்படுத்துவது, இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம், குடும்ப நலம், ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவோம். அதனால் தான் இந்த தேர்தல் அறிக்கைக்கு, 'Saat Vaade, Pakke Irade' (ஏழு வாக்குறுதிகள், உறுதியான நோக்கங்கள்) என்று பெயரிட்டுள்ளோம்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் ரூ. 500க்கு சமையல் எரிவாயுவும், 18-60 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும். சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை, ஆகியோருக்கு மாதம் ரூ.6,000 பென்ஷன் வழங்கப்படும். பொருளாதார பாதுகாப்புக்காக பழைய ஓய்வூதிய திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும்.
மேலும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையிலான காப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உறுதி வழங்கப்படும். பயிர் சேதாரங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். சாதி ரீதியான கணக்கெடுப்பு எடுப்பதுடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான வருமான வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பில் இரண்டு அறை கொண்ட வீடு கட்டி கொடுக்கப்படும். அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை நிரப்புவது, போதை பொருள்களற்ற ஹரியானாவை உருவாக்குவதற்கு சிறப்பு முன்னெடுப்பு எடுத்தல். என்று கூறியுள்ளார்.
ஹரியானாவில் விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அந்த மாநிலம் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஹரியானாவில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கு அக்டோபர் 5ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அக்டோபர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications