காலையிலேயே கொடுமை.. ரோட்டோரம் ஆட்டோவுக்கு காத்திருந்த 3 பெண்கள்.. வேகமாக வந்த லாரி.. ஹரியானா சோகம்

லாரி மோதி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இன்னல் மேல் இன்னலை சந்தித்து வரும் ஹரியானாவில், அடுத்த கொடுமை நடந்துள்ளது.. இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்..!

கடந்த ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் இந்த போராட்டத்தினை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இதில் பஞ்சாப் பெரும் சோகத்தை சந்தித்து வருகிறது.. ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர்.

 விசாரணை

விசாரணை

இதே ஹரியானாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தது.. இதனையறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.. சம்பவம் தொடர்பாக நிஹாங்ஸ் எனும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் குழுவை சேர்ந்த ஒருவரும், சரவ்ஜித் சிங் எனும் நபரும் போலீசில் சரணடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

 போராட்டம்

போராட்டம்

இந்த படுகொலைக்கு மத ரீதியான இழிவுபடுத்தியது காரணமாக சொல்லப்பட்டாலும், சம்பவம் நடந்த பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்திய இடமாகும்... இதுதான் பல்வேறு சந்தேகங்களை இந்த விஷயத்தில் கிளப்பியது. இந்நிலையில், இதே விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் ஒரு கோர விபத்து இன்று காலை நடந்துள்ளது. டெல்லி - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடம் அருகே வேகமாக வந்த லாரி, அங்கிருந்த தடுப்பு சுவரின் மீது மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர்..

ஆட்டோரிக்‌ஷா

ஆட்டோரிக்‌ஷா

விவசாயி கூலி பெண் தொழிலாளர்கள் 3 பேர், இன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பினர்.. அதற்காக சாலையோரம் ஆட்டோ ரிக்‌ஷாவிற்காக காத்திருந்தனர்.. அப்போதுதான் மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வந்தது.. அங்கிருந்த 3 பேர் மீதும் எதிர்பாராத விதமாக மோதிவிட்டது.. இதில் 3 பேருக்குமே உடல்நசுங்கிவிட்டது.. இதை பார்த்ததுமே லாரி டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. ஆனால் 2 பெண்கள் அங்கேயே உடல்சிதறி இறந்துவிட்டனர்..

 படுகாயம்

படுகாயம்

படுகாயங்களுடன் விழுந்து கிடந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இவர்கள் 3 பேருமே பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன... கடந்த 11 மாதங்களாக 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்து வரும் திக்ரி எல்லையில்தான் இந்த கோர விபத்தும் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+