என் தங்கச்சி என்னை அடிச்சுட்டா.. அவரோட புருஷன் மிரட்டினார்.. போலீஸிடம் ஓடிய டிக்டாக் சோனாலி!

தங்கை மீது பாஜக பிரமுகர் சோனாலி பொகத் புகார் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TikTok Star Sonali Alleges Assault By Sister, Files Case

    சண்டிகர்: டிக் டாக் ஸ்டார் சோனாலி போகத்துக்கு நேரமே சரியில்லை. முதலில் தேர்தலில் தோல்வியுற்றார். இப்போது தனது தங்கையும், தங்கை கணவரும் தன்னை அடித்து மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    40 வயதான சோனாலி, ஹரியானாவில் வெகு பிரபலமானவர். எப்படி என்றால்.. டிக் டாக் மூலமாக ஏராளமான மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இந்த பிரபலம் காரணமாக அவருக்கு தேர்தலில் போட்டியிட ஹரியானா பாஜக வாய்ப்பளித்தது. அவரும் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றார்.

    TikTok Star Sonali Phogat Alleges Assault By Sister, Brother-In-Law, Files Case

    இந்த நிலையில், தற்போது புதிய புகாருடன் போலீஸ் நிலையம் வந்துள்ளார் சோனாலி. இதுதொடர்பாக போலீஸில் அவர் கொடுத்துள்ள புகாரில், அக்டோபர் 28ம் தேதி மாலை நான் பதேபாத் மாவட்டம் புந்தன் கலன் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டுக்குப் போயிருந்தேன்.

    அப்போது, எனது தங்கை ருகேஷ் மற்றும் அவரது கணவர் அமன் ஆகியோர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடித்தனர். மிரட்டவும் செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சோனாலி.

    புகாரின் பேரில் போலீஸார் தாக்குதல், குற்றச் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. டிக் டாக் சோனாலி தாக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+