அடி தூள்.. முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம்.. பூரிப்பில் பஞ்சாப்.. கெஜ்ரிவால் பங்கேற்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் 48 வயது நிரம்பிய முதல் அமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92ல் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.

2வது திருமணம்
முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். எம்பியாக இருந்த இவர் சட்டசபை தேர்தலில் துரிதமாக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான் நாளை 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர் டாக்டரான குர்ப்ரீத் கவுர் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு
இந்த திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இவர் உள்பட சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் மனைவியுடன் விவாகரத்து
பகவந்த் மான் தனது முதல் மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார். பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு பகவந்த் மானின் முதல் மனைவி தனது 2 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக செயல்படும் முதல்வர்
பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டத்தை துவங்கினார். முன்னதாக அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications