13 வயசு பையனுடன் டியூஷன் டீச்சர்.. முதலிரவும் நடந்து முடிந்து.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா

13 வயது சிறுவனை டியூஷன் டீச்சர் மணந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கல்யாண பொண்ணு ஒரு ஸ்கூல் டீச்சர்.. இவங்க வயசை விடுங்க.. ஆனால் மாப்பிள்ளைக்கு வயசு 13தான்.. இவர்களுக்கு முதலிரவும் நடந்துள்ளது.. இப்படிப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டுதான், மக்கள் உறைந்து போய் உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பஸ்தி பாவா கெல் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. வீட்டிலேயே டியூஷனும் நடத்தி வருகிறார்.. ரொம்ப வருஷமாகவே இவருக்கு கல்யாணம் ஆகவில்லை.. இவர் வீட்டில் கல்யாணத்துக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.. ஆனால் எதுவுமே செட் ஆகவில்லை.

அதனால் ஜோசியம் பார்த்திருக்கிறார்கள்.. அந்த ஜோசியத்தில் டீச்சருக்கு "மாங்கல்ய தோஷம்" இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்..

 கல்யாணம்

கல்யாணம்

அதுமட்டுமல்ல, அந்த தோஷத்தை கழிக்க வேண்டுமானால், போலியாக ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.. அதற்கு பிறகு விதவை சாங்கியத்தை செய்ய வேண்டும் என்று அந்த ஜோசியக்காரர் சொல்லி இருக்கிறார். தோஷம் உள்ளவர்கள் நம்ம ஊரில் வாழை மரத்துக்கு தாலி கட்டுவார்களே அந்த மாதிரி போலும்... இந்த டம்மி கல்யாணத்தை செய்து கொள்ளலாம் என்றால், அதற்கும் டீச்சருக்கு வழியில்லை.. சரியான வாய்ப்பு அமையவில்லை.

சிறுவன்

சிறுவன்

அப்போதுதான், தன்னிடம் டியூஷன் படித்து வரும் 13 வயசு பையனிடம் பார்வை திரும்பியது.. அந்த சிறுவன் என்றால் டீச்சருக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஸ்பெஷல் மாணவனும்கூட.. மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதைவிட, இந்த சிறுவனுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாடம் எடுத்து கூடுதல் அக்கறை செலுத்துவாராம்.. இது அந்த சிறுவனின் வீட்டுக்கும் தெரியுமாம். தங்கள் மகன் மீது டீச்சர் இவ்வளவு அன்பு காட்டுகிறார்களே என்று சிறுவனின் குடும்பமும் பூரித்து போனது.

அனுமதி

அனுமதி

இந்நிலையில், ஒருநாள் சிறுவனின் வீட்டுக்கு சென்ற டீச்சர், உங்கள் பையனுக்கு நிறைய சொல்லி தர வேண்டி உள்ளது.. இதனால், 2 நாட்கள் என் வீட்டிலேயே தங்கி இருக்கட்டும், அனுப்ப முடியுமா? டியூஷன் நடத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. அதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு பிறகு, ஒரு வாரம் கழித்து, டீச்சரின் வீட்டில் இருந்த சிறுவன், தன்னுடைய வீட்டுக்கு சென்றான்..

 மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம்

ஆனால், வீட்டுக்கு போனதில் இருந்தே சிறுவன் பயம், பீதி, டென்ஷனுடனேயே இருந்திருக்கிறான்.. இதனால் பதறி போன பெற்றோர் என்ன ஏதென்று கேட்டனர்.. அப்போதுதான் நடந்ததை சிறுவன் சொல்ல.. அதைக்கேட்டு குடும்பத்தார் அப்படியே மிரண்டு போய்விட்டனர். டீச்சர் தன்னுடைய மாங்கல்ய தோஷத்தை கழிக்க சிறுவனை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது.. சிறுவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டாராம் டீச்சர்.. வீட்டிலேயே அந்த ரகசிய கல்யாணம் நடந்துள்ளது..

 விதவை கோலம்

விதவை கோலம்

இதில் ஹைலைட் என்னவென்றால், கல்யாணத்தில் மணப்பெண்ணுக்கு செய்யும், மெஹந்தி விழா, மஞ்சள் விழா கூட நடந்துள்ளது.. மாப்பிள்ளை கெட்டப்பில் சிறுவனை ரெடி செய்துள்ளனர்.. டீச்சருக்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, அன்னைக்கு நைட், முதலிரவும் நடந்ததாம்.. இதை போலீஸ் தரப்பிலேயே சொல்கிறார்கள்.. இதற்கு பிறகு மறுநாள் காலை டீச்சருக்கு அடுத்த சாங்கியம் நடந்துள்ளது..

வளையல்கள்

வளையல்கள்

வெள்ளை புடவை கட்டி, உட்கார வைத்து, அவரது வளையல்களை உடைத்து, தாலியை கழட்டி, விதவை சாங்கியத்தை சிறப்பாக செய்து தோஷத்தையும் கழித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய் நின்றிருக்கிறது அந்த 13 வயது பிஞ்சு.. வீட்டில் இதையெல்லாம் சொல்லாதே என்று சொல்லி, சிறுவனை அனுப்பியும் வைத்துள்ளனர்..

வாபஸ்

வாபஸ்

இவ்வளவும் கேட்டு அதிர்ந்து போன சிறுவனின் பெற்றோர், போலீசுக்கே போய்விட்டனர்.. ஆனால், டீச்சரின் குடும்பம் எதை எதையோ பேசி, அந்த புகாரையே வாபஸ் பெற வைத்துவிட்டதாம்.. இருந்தாலும் அந்த சிறுவன் மைனர் என்பதால், நிச்சயம் இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்படும் என்று டிஎஸ்பி ஜலந்தர் குர்மீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இன்னும் இந்த தேசத்தில் என்னென்ன நாம பார்க்க வேண்டி வருமோ? மூடநம்பிக்கை நம்மை எங்கே கொண்டு போய் விட்டுவிடுமோ? தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+