பண்ணை வீட்டில் "உறுப்புகளே" இல்லாத பெண்.. குடோனுக்குள் உறைந்த போலீஸ்.. கடைசியில என்னாச்சு தெரியுமா
சண்டிகர்: பண்ணை வீட்டுக்குள் அந்த பெண்ணை பார்த்ததுமே, போலீசார் பதறிப்போய்விட்டார்கள்.. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு, குற்வாளியை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன.. குறிப்பாக பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இதை அந்தந்த மாநில எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டி ஆளும் கட்சிகளை கண்டித்து வருகின்றன.. ஆனாலும், குற்ற சம்பவங்கள் குறையாமலேயே உள்ளன..
உடல் உறுப்புகள்: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், குடும்ப வன்முறை சம்பவங்களை வைத்தே எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதும் அதிகரித்து வருகிறது. இதோ ஹரியானாவில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் உள்ளது குக்டோலா என்ற கிராமம்.. இங்கு ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி போலீசாருக்கு தகவல் பறந்தது.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்..
அந்த சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.. அதற்கு தலையும் கைகளும் காணோம்.. உயிரிழந்த பெண்ணுக்கு 30 வயதிருக்கலாம் என தெரிகிறது.. அங்குள்ள விவசாய பண்ணையில் உள்ள குடோனில் அந்த சடலம் இருந்துள்ளது.. இதையடுத்து, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு போலீசார் அனுப்பி வைத்து, வழக்கு பதிவுசெய்து, விசாரணையையும் துவங்கினர்.. முதல் விசாரணையே, அந்த குடோனின் ஓனர் உமர் சிங்தான்.
பண்ணை நிலம்: தன்னுடைய குடோனுக்குள் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் சொன்னதே இந்த ஓனர்தான்.. சடலத்தை முதலில் பார்த்தவரும் இந்த ஓனர்தான்.. 8 ஏக்கர் விவசாய நிலத்தை ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாராம் இந்த குடோன் ஓனர்.. சம்பவத்தன்று, குடோனில் இருந்து புகை வருவதாகவும், உடல் எரிக்கப்படுகின்ற நாற்றம் வருவதாகவும், பக்கத்து வீட்டு நண்பர் தெரிவித்ததால், உடனே ஓடிச்சென்று பார்த்ததாகவும், அப்போதுதான் எரிந்து போன சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், பிறகு போலீசிடம் தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் கூறினார்.
அங்க அடையாளம்: ஆனால், அந்த பெண் யார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.. தலையை காணவில்லை என்பதால், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளமும் தெரியாமல் போலீசார் குழம்பி போனார்கள்.. இதனால், காணாமல் போன பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.. அப்போதுதான், அடுத்த 2 வது நாளே, அதாவது கடந்த 23ம் தேதி பெண்ணின் வெட்டப்பட்ட கைகளையும், தலையையும் போலீசார் கண்டுபிடித்தனர்...
இவைகளை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் கேர்கி டௌலா பகுதியை சேர்ந்தவர் என்பது உறுதியானது. அந்த பெண்ணின் கணவர் பெயர் ஜிதேந்தர்.. 34 வயதாகிறது. காந்தி நகர் பகுதியை சேர்ந்தவராம்.. மானேசர் பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருக்கிறார்.. இவர்தான் மனைவியை கொன்றுள்ளார்.. சடலத்தை எங்கே போடுவது என்று தெரியாமல், அதை துண்டு துண்டாக வெட்டி, குடோனில் கொண்டு வந்து எரித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் உறுப்புகளைத் தனித்தனியே வெட்டி, சதைத் துண்டுகளை வெவ்வேறு இடங்களில் வீசி விட்டு சென்றிருக்கிறார்.
தலை எங்கே: இதுகுறித்து குருகிராம் போலீஸ் கமிஷனர் காலா ராமச்சந்திரன் சொல்லும்போது, "கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.. விசாரணையை முடுக்கியிருக்கிறோம்.. ஜிதேந்திரா மீது கொலை மற்றும் தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகுதான், பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகள் அனைத்தையும் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்றொருபுறம், மனைவியை கொன்ற காரணம் குறித்தும் ஜிதேந்திராவிடம் விசாரணை துரிதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications