ஹரியானாவில் திடீரென ஏற்பட்ட வன்முறை! இது முதல்முறை இல்லை.. அடுத்தடுத்து நடக்கும் கலவரம்! என்ன காரணம்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் அமைதியைத் திரும்பக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்க நூஹ் என்ற இடத்தில் ஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையில் அங்குப் பல இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்முறை: இதற்கிடையே இங்கே நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை என்பது அங்கு மாநிலத்தில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் போலீசாரால் பாதுகாக்க முடியாது என்று கூறினார். ஹரியானாவில் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் முதல்வர் இருப்பதையே இந்தக் கருத்து காட்டுவதாகப் பலரும் விமர்சித்துள்ளனர்.
மாநிலத்தில் 50 அல்லது 60 ஆயிரம் போலீசார் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்களை வைத்துக் கொண்டு 2.80 கோடி மக்களைப் பாதுகாக்க முடியாது என்றும் முதல்வர் கூறினார். முதல்வரின் இந்தக் கருத்தை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியினர் ஹரியானா மக்களின் பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பு என்பதைக் காட்டும் வகையில் முதல்வரது பேச்சு இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆட்சியில், சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
இது முதல்முறை இல்லை: மேலும், ஹரியானாவில் கட்டார் ஆட்சியில் இதுபோன்ற மோசமான வன்முறை நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ராம்பால் என்ற மத குரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போதும் அங்குப் பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது மிகப் பெரிய வன்முறை ஏற்பட்ட நிலையில், அங்குப் பதற்றம் தனியவே சில நாட்கள் ஆனது. இந்த வன்முறை தொடர்பாக 900 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் நடந்த வன்முறை: அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டில் ஜாட் இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தடுக்கவும் மனோகர் அரசு தவறிவிட்டது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டில் மற்றொரு மத குருவான ராம் ரஹீம் விவகாரத்திலும் திடீரென வன்முறை ஏற்பட்டது. ராம் ரஹீமை கைது செய்யவே போலீசார் பெரும்பாடு பட்டனர். அப்போதும் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அங்குள்ள எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் போது ஒவ்வொரு நபருக்கும் தன்னால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அவர் கூறுவது ஹரியானா போலீசார் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்பதையே காட்டுவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
என்ன காரணம்: நூஹ் நகரில் நடந்தது திட்டமிட்ட வன்முறை என்பதை மனோகர் லால் கட்டரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், வன்முறைகளை அரசால் தடுக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அங்குள்ள எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மேலும், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்காததே இங்கு வன்முறை ஏற்படவும் அது மற்ற இடங்களுக்குப் பரவவும் காரணம் என்றும் அவர்கள் சாடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications