"நீ செய்யுறது தப்பு"! கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற யூடியூபர்! சடலத்தை சாக்கடையில் வீசிய கொடூரம்
சண்டீகர்: ஹரியானா மாநிலத்தில் கள்ளக்காதலனின் துணையுடன் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொன்றுவிட்டு அவரது உடலை கால்வாயில் வீசிச் சென்றதாக யூடியூபரான அவரது மனைவியை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. இவர் பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது போல் இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
ரவீணாவுக்கும், பிரவீன் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 6 வயதில் மகன் உள்ளார். இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு புயல் வீசத் தொடங்கியது.
ரவீணா
அதாவது ரவீணாவுக்கு சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வீடியோக்களை ரவீணா தனது சேனலில் போட்டு வந்தார். இந்த வீடியோக்களுக்கு பலரும் ஆபாசமாக கமென்ட் கொடுத்து வந்தனர்.
கண்டித்த பிரவீன்
இதனால் அவருடைய கணவர் பிரவீன், ரவீணாவை கண்டித்தார். மேலும் இனி சுரேஷுடன் இணைந்து வீடியோ போட வேண்டாம் என்றும் தெரிவித்தாராம். ஆனால் ரவீணா கேட்கவில்லையாம். இதனால் கணவர்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கள்ளக்காதல்
அப்போது ரவீணாவுக்கும் சுரேஷுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களது காதலை வளர்த்துக் கொள்ள இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க தொடங்கினர். கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிரவீண் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு
அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர் வீட்டு படுக்கை அறையில் இருவரும் தனிமையிலே இருந்ததை கண்டு பிரவீன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த இடத்தை விட்டு சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
கள்ளக்காதலனுக்கு போன்
இது தொடர்பாக பிரவீனுக்கும் ரவீணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படியே போனால் இனியும் நாம் சுரேஷுடன் நினைத்த மாதிரி வாழ முடியாது என கருதிய ரவீணா, அன்று இரவே தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்தார்.
சுரேஷை கொன்ற மனைவி
இரவு எல்லாரும் தூங்க சென்றதும் சுரேஷை தனது வீட்டிற்குள் வரவழைத்த ரவீணா, தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அறைக்கு சுரேஷுடன் சென்றார். உடனே கையில் இருந்த துப்பட்டாவால் கணவரின் கழுத்தை இறுக்கினார். இதில் பிரவீண் துடிதுடித்து இறந்தார்.
சாக்கடையில் சடலம்
பின்னர் இருவரும் சேர்ந்து பிரவீனின் உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்துவிட்டனர். இந்த நிலையில் பிரவீன் நீண்ட நாளாக வீட்டிற்கு வராததை அடுத்து அவரது குடும்பத்தினர் கேட்ட போது அது குறித்து தனக்கு தெரியாது என ரவீணா கூறினாராம்.
சடலம் கிடைத்தது
மேலும் ரவீணாவின் நடவடிக்கைகளில் பிரவீன் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸில் பிரவீனை காணவில்லை என புகார் அளித்தனர். இதனிடையே கால்வாயில் இருந்த உடல் பிரவீனுடையது என கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டது.
ரவீணாவிடம் விசாரணை
இதனிடையே ரவீணாவும் சுரேஷும் , பிரவீனின் உடலை கோணிப்பையில் கட்டி இரு சக்கரவாகனத்தில் கொண்டு செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. இதையடுத்து ரவீணாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைகள் தெரியவந்தது.
யூடியூபர் கைது! கள்ளக்காதலனுக்கு வலை
இதையடுத்து ரவீணா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய கள்ளகாதலன் சுரேஷை போலீஸார் தேடி வருகிறார்கள். கணவரை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications