தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா... தொடர்ந்து குறையும் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 295 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,039 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 64 ஆயிரத்து 075 தனிநபர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 1,098 பேர் குணமடைந்தனர். தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,039(தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 295 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 68-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications