சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டிட்டோ வைகோ".. அதே 1 + 1 ஃபார்முலா டீல்.. திமுக கூட்டணியில் இணைகிறதா அந்த கட்சி.. அடடே இவரா.. செம்ம

மநீம திமுகவுடன் எம்பி தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியுடன் விரைவில் இன்னொரு புதிய கட்சியும் ஐக்கியமாகலாம் என்றும், இவர்கள் இணைந்து எம்பி தேர்தலை சந்திக்க முனையலாம் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.

திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

திமுக நாடகம் போடுகிறது.. பிராமணர்களுக்கு மட்டுமா 10% இடஒதுக்கீடு? கொந்தளிக்கும் அண்ணாமலை! திமுக நாடகம் போடுகிறது.. பிராமணர்களுக்கு மட்டுமா 10% இடஒதுக்கீடு? கொந்தளிக்கும் அண்ணாமலை!

வேல்முருகன்

வேல்முருகன்

எனினும், மக்கள் நீதி மய்யத்தையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள திமுக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலின்போதே, இப்படி பேச்சு எழுந்தது.. உதயநிதி ஸ்டாலினுடன் இதுகுறித்த பேச்சுவார்த்தையை கமல் நடத்தியதாகவும், ஆனால், சீட் விவகாரங்களில் உடன்பாடு எட்டாத காரணத்தினால் கூட்டணியில் இடம்பெற முடியாமல் போனதாகவும் கூறப்பட்டது.. அந்தவகையில், இந்த முறை எம்பி தேர்தலில், கூட்டணி வைக்க முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

சூசகம்

சூசகம்

இப்படி ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன்புகூட கசிந்தது.. விக்ரம் படத்தின் தமிழக உரிமையை, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியபோது, படத்தின் வெற்றிக்கு பிறகு, கமலுக்கும், உதயநிதிக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளதாக சினிமா வட்டாரத்திலேயே அப்போது பேசப்பட்டது.. இந்த நெருக்கம் தற்போது அரசியல் வரை வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்..
வரும் தேர்தலில், எப்படியாவது அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதில் கமலும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. தனித்து நின்றால் சாதிக்கும் வாய்ப்பு குறைவு என்பதாலேயே, கூட்டணி என்ற விஷயத்தில் கமல் தெளிவாக இருக்கிறாராம்.

 1+1

1+1

அந்தவகையில், திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மய்யத்தினரும் சில மாதங்களுக்கு முன்பே மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொன்னார்கள்.. அப்போது, டார்ச் லைட் சின்னத்தில் சுமார் 5 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளது.. ஆனால், திமுக தரப்பில் ஒரே ஒரு மக்களவை தொகுதி கொடுப்பதாகவும், அந்த தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்கு என்று கூறப்பட்டதாம்.. வேண்டுமானால், கமலுக்கு நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும் பேசப்பட்டதாக தெரிகிறது.

 டைம் ஓவர்

டைம் ஓவர்

இப்படி, தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வோம் என்று திமுக சொன்னது, மய்யத்துக்கு மகிழ்ச்சியை தந்தாலும், சில விஷயங்களில் உடன்பாடு காட்டவில்லையாம்.. ஒரு தொகுதியென்றாலும் கொங்கு மண்டலத்தில் கொடுக்க வேண்டும், அதிலும் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று கமல் தரப்பு கறார் காட்டியதாக தெரிகிறது.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று இந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போடப்பட்டதாம்... இப்போது இந்த பேச்சு வேகம் எடுத்துள்ளது.. அதேபோல, கமல் தயாரிப்பில் உதயநிதியும், உதயநிதி தயாரிப்பில் கமலும் நடிக்க போவதாக பிளான் உள்ளதாம்.

 டார்ச் லைட்

டார்ச் லைட்

டார்ச் லைட் சின்னத்துடன், 2 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற கோரிக்கையை கமல் முன்வைக்கலாம், அப்படி 2 சீட் தரும் பட்சத்தில் ஒரு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் போட்டியிடலாம் என்றும் மய்யத்தின் கணக்கு போடப்பட்டு வருகிறதாம். ஆனால், திமுக வேறு ஒரு கணக்கை முன்வைக்கிறதாம்.. ஒரு லோக்சபா தொகுதி + ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் மய்யத்துக்கு உறுதி தரப்பட்டுள்ளதாம்..

வைகோ

வைகோ

அதாவது கடந்த தேர்தலில் வைகோவுக்கும் இதே பார்முலாவைதான் திமுக கையில் எடுத்தது.. 1 +1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்தது.. அந்த வகையில், கமலையும், ராஜ்யசபாவுக்கு அனுப்பி, பிரச்சாரத்துக்கும் அனுப்ப திமுக பிளான் போட்டு வருவதாக கூறுகிறார்கள்.. இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை என்றாலும், கமல் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.. காரணம், நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை கமல் வெகுவாக அள்ளுவார் என்பதே திமுக போடும் கணக்கு.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்.

English summary
1+1: Is Is there a chance of MNM Kamal Haasan forming an alliance with DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X