வஞ்சத்தில் வீழ்ந்த அதிமுக மாஜிகள்.. ஸ்கெட்ச் செங்கோட்டையனா? இது லிஸ்ட்லயே இல்லையே! உடைந்த சீக்ரெட்!
சென்னை: அதிமுகவில் பரபரப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இரண்டாக உடைந்த அதிமுகவிலிருந்து செம்மலை வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் ஒரு தரப்பை காலி செய்து தவெக வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிற்க வைத்து தனிப் பெரும்பான்மை பெறுவது தான் செங்கோட்டையனின் திட்டம் எனவும், இதில் அதிமுகவின் ஒரு தரப்பே மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக எஸ்.பி வேலுமணி தரப்பை குறி வைத்து செங்கோட்டையன் அனைத்து திட்டங்களையும் தீட்டியதாக சொல்கின்றனர்.
யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பெரும் மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. தமிழகம் கண்டிராத வகையில் கட்சியை ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் விஜய்.

தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவாகியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீண்டும் பரபரப்பை அதிகரித்தது.
அதிமுக பிளவு
நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி சி.வி சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளித்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தேர்தலுக்கு முன் தீவிர ஆதரவாளர்களாக இருந்த நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் & கோ சென்றது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. எடப்பாடி விஜய் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த நிலையில் அவர் தரப்பில் 22 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் நாங்கள்தான் உண்மையான அதிமுக எங்களைத்தான் சட்டசபை குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பும் சபாநாயகர் இடம் மனு அளித்திருக்கிறது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை ஏதாவது ஒரு தரப்பை சபாநாயகர் அங்கீகரித்தால் மற்றொரு தரப்பின் எம்எல்ஏ பதவி பறிபோகும் சூழல் உள்ளது.
செங்கோட்டையன்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை தான் சபாநாயகர் அங்கீகரிப்பார் என்கின்றனர். இதற்கு காரணம் செங்கோட்டையன் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். தவெக ஆட்சி பெரும்பான்மை பெறாத போது, எதற்கும் இருக்கட்டும் என அதிமுக தரப்பைச் சேர்ந்த சிலர் முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசி இருந்தார் செங்கோட்டையன். ஆனால் அவர்கள் நான்கு நாட்களாக எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
தமிழக வெற்றி கழகம்
இதற்கிடையே கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததும் தற்போது அமைச்சர் பதவியில் பங்கு கேட்கலாம் என முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்களையெல்லாம் காலி செய்து விட்டு இடைத்தேர்தலில் நடத்தி வெற்றி பெற வேண்டும், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதுதான் செங்கோட்டையனின் எண்ணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து செங்கோட்டையன் வெளியேறிய போது அவருடன் வருவதற்கு சில முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருந்தனர். ஆனால், எங்கே செங்கோட்டையன் நம்மை நடுரோட்டில் விட்டு விடுவாரோ? என பயந்து அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது அதே டீம் தான் செங்கோட்டையனுக்கு ( தவெக அரசு) ஆதரவு தருவதாக சொல்லி இருக்கிறது.
எஸ்பி வேலுமணி
அவசரத்துக்கு நாம் கேட்டபோது உதவாதவர்கள், இப்போது வருகிறார்கள் என கோபத்தில் இருக்கும் செங்கோட்டையன் விஜய் தரப்புக்கு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அதாவது எடப்பாடி தரப்பை அங்கீகரிப்பது, எஸ்பி வேலுமணி தரப்பை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சிக்க வைப்பது, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதும், தவெக தனி பெரும்பான்மை பெறுவது என்பதுதான் செங்கோட்டையனின் எண்ணம். தற்போது அதில் பாதி நிறைவேறி இருக்கும் நிலையில், மீதி திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications