1 + 1 டீல்?.. திமுகவில் புதுஸ்ஸா சேரும் கட்சி.. அட இவரா.. விக்கித்த பாஜக.. அமித்ஷாவிடம் ஓடிய 2 லீடர்

மநீம திமுகவுடன் எம்பி தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியுடன் விரைவில் இன்னொரு புதிய கட்சியும் ஐக்கியமாகலாம் என்றும், இவர்கள் இணைந்து எம்பி தேர்தலை சந்திக்க முனையலாம் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.

அந்தவகையில், திமுகவை பொறுத்தவரை, தற்போதுள்ள கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

வாழ்வுரிமை

வாழ்வுரிமை

இருந்தாலும், மக்கள் நீதி மய்யத்தையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள திமுக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலின்போதே, இப்படி பேச்சு எழுந்தது.. உதயநிதி ஸ்டாலினுடன் இதுகுறித்த பேச்சுவார்த்தையை கமல் நடத்தியதாகவும், ஆனால், சீட் விவகாரங்களில் உடன்பாடு எட்டாத காரணத்தினால் கூட்டணியில் இடம்பெற முடியாமல் போய்விட்டது.. எனவே, வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கமல் கூட்டணி வைக்க போவதாக சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு தகவல் கசிந்தது.

 இணக்கம் பிணக்கம்

இணக்கம் பிணக்கம்

குறிப்பாக, விக்ரம் படத்தின் தமிழக உரிமையை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியபோது, படத்தின் வெற்றிக்கு பிறகு, கமலுக்கும், உதயநிதிக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளதாக சினிமா வட்டாரத்திலேயே பேசப்பட்டது.. இந்த நெருக்கம் தற்போது கூட்டணி வரை வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. தனித்து நின்றால் சாதிக்கும் வாய்ப்பு குறைவு என்பதாலேயே, கூட்டணி என்ற விஷயத்தில் கமலும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது,.

 1+1 = 2

1+1 = 2

அந்தவகையில், திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மய்யத்தினரும் சில மாதங்களுக்கு முன்பே மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொன்னார்கள்.. அப்போது, டார்ச் லைட் சின்னத்தில் சுமார் 5 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாம்.. ஆனால், திமுக தரப்பில் ஒரே ஒரு மக்களவை தொகுதி கொடுப்பதாகவும், அந்த தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்கும் என்று சொன்னதாம்.. வேண்டுமானால், கமலுக்கு நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும் பேசப்பட்டதாம்.

 டைம் ஓவர்

டைம் ஓவர்

தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வோம் என்று திமுக சொல்வது, மய்யத்துக்கு மகிழ்ச்சியையே தந்தாலும், 2 சீட்டுக்களை பெற்று, ஒரு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் போட்டியிடலாம் என்று கமல் ஒரு கணக்கு சொன்னாராம். ஆனால், அதற்கு திமுக வேறு ஒரு கணக்கை முன்வைத்ததாம்.. ஒரு லோக்சபா தொகுதி + ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் மய்யத்துக்கு உறுதி தரப்பட்டதாம்.. அதாவது, கமலை ஒருபக்கம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி, இன்னொரு பக்கம் பிரச்சாரத்துக்கும் அனுப்ப தன் பிளானை திமுக சொன்னதாக தெரிகிறது.

 நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இப்படி பல்வேறு யூகங்கள் கடந்த சில தினங்களாகவே வலம் வந்த நிலையில், இப்போதும் ஒரு தகவல் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன்படி, திமுக கூட்டணியில் கமல் இணையும்பட்சத்தில், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்க, திமுக தரப்பு திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. கமலை இங்கு நிறுத்தினால், இந்த 2 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜகவை வீழ்த்தலாம் என்று திமுக கணக்கு போடுகிறதாம்.. ஆனால், கமல் என்ன முடிவு எடுப்பார் என தெரியவில்லை.. கடந்த முறை கோவையில் தோற்றதால், இந்த முறை தென் சென்னையில் போட்டியிடவே விரும்புவார் என்கிறார்கள்.

 2 புள்ளிகள்

2 புள்ளிகள்

அதேசமயம், தங்களுக்கு ஓரளவு பலம்வாய்ந்த தொகுதிகளான, தென்சென்னையையும், கோவையும், பாஜக லேசில் விட்டுவிடாது என்கிறார்கள்.. காரணம், இந்த 2 தொகுதிகளுக்கும் 2 பாஜக புள்ளிகள் இப்போதே குறி வைத்துள்ளார்களாம்.. கோவையில், அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.. இப்படி ஒரு ஆர்வம் தங்களுக்கு உள்ளதை, அமித்ஷாவிடமே சொன்னதாகவும் தெரிகிறது.. சம்பந்தப்பட்ட 2 பேருமே ஜாம்பவான்கள் என்பதால் மேலிடம் அதற்கு சம்மதம் சொல்லவே வாய்ப்புள்ளதாம்.. ஆக, இந்த முறையும் பாஜகவை எதிர்கொள்ள கமல் ரெடியாக போகிறார் போலும்..!

2 குறி

2 குறி

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 10 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட முனைப்பு காட்டிவருவதாக தெரிகிறது.. ஒருபக்கம் திமுக அரசின் டேமேஜ்களை அதிகமாக வெளிப்படுத்தி கொண்டே, மற்றொருபுறம், மோடி அரசின் சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்வது என்ற வியூகங்களும் வகுக்கப்பட்டு வரும்நிலையில் இந்த 10 தொகுதிகளிலும் ஸ்டார் வேட்பாளர்களை களமிறக்கவும் யோசனை இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.. இந்நிலையில், சம்பந்தப்பட்ட 10 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு, தலைவர்கள் குறி வைத்துள்ளது, தமிழக அரசியலில் பாஜகவின் வேகத்தையே எடுத்துக் காட்டுவதாக தெரிகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+