எஸ்.பி.வேலுமணி மீது காவல் ஆணையரிடம் ரூ.1.2 கோடி பண மோசடி புகார்
சென்னை காண்ட்ராக்ட் பணி ஒதுக்குவதாக கூறி ரூ.1.2 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாகவும், திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கான்ட்ராக்டர் ஒருவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீது காண்ட்ராக்டர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கோவை, வடக்கு கணபதிபுரம் வி.ஜி. ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம் ( 51) இவர் காண்ட்ராக்டராக உள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று நேரில் வந்த திருவேங்கடம் காவல் ஆணையரைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார், அப்போது அவர் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் 2016 ஆம் ஆண்டு தான் காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன் தொகையாக ரூ.1 2கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்ததாகவும் ஆனால் சிவில் ஒர்க் பணிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி பணத்தை பெற்ற அமைச்சர் அதன்பின் எனக்கு பணி ஒதுக்கவில்லை.
இப்படியே 2016 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. தற்போது ஆட்சியும் மாறிவிட்டதால் பணத்தை திரும்பக்கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
காவல் ஆணையரிடம் திருவேங்கடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, " எனக்கு 2002ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.வேலுமணி பழக்கமானவர். முன் தொகையாக கமிஷன் கொடுத்தால் எனக்கு சிவில் ஒப்பந்த பணிகளை தருவதாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.பி.வேலுமணி சொன்னதன் பேரில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு கோடி ரூபாய் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 தேதியில் 20 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொடுத்தேன்.
பின்னர் அவர் சொன்னபடி அவருடைய பிஏ பார்த்திபனிடம் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் கொடுத்த விபரத்தை எஸ்.பி.வேலுமணியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை வேறு ஒப்பந்ததாரர்களுக்கு அப்பணிகளை கொடுத்துவிட்டார்.
அவர்கள் எனக்கு கொடுப்பதாக சொன்ன ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை, மேற்படி நான் கொடுத்த பணத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. அதன்பிறகு பலமுறை நேரில் சென்று நான் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டேன். அப்போதெல்லாம் பொறுமையாக இருங்கள் பணி ஒதுக்கீடு செய்து தருகிறோம் என்றுச் சொல்லி காலம் தாழ்த்தி வந்தனர்.
எஸ்.பி.வேலுமணியின் மூத்த சகோதரர் அன்பரசனிடம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி நேரில் சந்தித்து விவரங்களைச் சொன்னேன். அதற்கு மூன்று நாட்கள் கழித்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவர் கூறினார். நான் அதன்படி அவரது அண்ணனை, ஜூன் 20 ஆம் தேதி எஸ்.பி.வேலுமணியின் கோவையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆட்சி மாறி விட்டது இனி எனக்கு எப்படி எனக்கு பணி ஒதுக்குவீர்கள்? எனவே எனது பணத்தை திரும்ப தாருங்கள் என்று கேட்டேன்.
20 நாட்களில் தருவதாக அவர் கூறினார். அதன் பின்னர் வேலுமணியின் மூத்த சகோதரர் அன்பை பார்ப்பதற்காக 23 ஜூன் அன்று நேரில் அவர் வீட்டில் சென்று கேட்டபோது அவர் சென்னை சென்று விட்டதாக சொன்னார்கள். நான் அவரை குறுந்தகவல் மூலமாக தொடர்பு கொண்டு என்னுடைய பணப்பிரச்சினை கூறினேன். அதற்கு என்னுடைய அவசரத் தேவை எவ்வளவு என்று கேட்டார். ரூ.5 லட்சம் அடகு கடைக்கு வட்டி கட்ட தேவைப்படும் கூறினேன்.
உடனே எனது வங்கிக்கணக்கு எண்ணை தனக்கு அனுப்புமாறு கேட்டார். நானும் அவரது கைப்பேசிக்கு எனது வங்கி கணக்கு எண்ணை அனுப்பினேன். அன்றைய தினமான ஜூன் 23 அன்று அவர் குறிப்பிட்டபடி சிட்டி யூனியன் வங்கி கணக்கிற்கு வந்துவிட்டது. மீதி பணம் இரண்டு தவணையாக சில நாட்களில் திருப்பித் தருவதாக அன்பரசன் சொன்னார். பின்னர் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று எஸ்.பி.வேலுமணியை அவரது கோயம்புத்தூர் வீட்டிற்கு பார்க்கச் சென்றேன்.
அவரின் உதவியாளர்கள் சந்தோஷ், தேவராஜ் இருவரும் இருந்தனர். உங்களை எஸ்.பி.வேலுமணி கேசிபி.சந்திரசேகர் என்பவரை அவரது வடவள்ளி அலுவலகத்திற்கு சென்று சந்திரசேகர் மற்றும் வினோத்தை பார்க்கச் சொன்னார் என கூறினார்கள். நானும் அவர்கள் கூறியபடி அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது அங்கு அவர்கள் 2 பேரும் இல்லை.
அலுவலக உதவியாளர் பாலாஜி என்பது மட்டும் இருந்தார் அவரிடம் அமைச்சர் வேலுமணி அனுப்பியதாக கூறி சந்திரசேகர் மற்றும் வினோத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் அதற்கு அலுவலக உதவியாளர் பாலாஜி அவர்களை நீங்கள் பார்க்க முடியாது அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் நீங்கள் வந்து சென்றதாக சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
நான் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளரை அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். எனது தொலைபேசி எண்ணுக்கு பத்து நிமிடத்தில் சந்திரசேகர் தொடர்புகொண்டு நாளை ஜூலை 12 அன்று ரேஸ் கோர்ஸில் சந்திப்பதாக கூறினார். நானும் அதன்படி அங்கு சென்றேன் திருச்சி ரோட்டில் உள்ள ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்தில் வருமாறு தெரிவித்தார். நான் அங்கு நேரில் சென்று பார்த்தேன். ஒரு சில நாட்களில் பணம் கொடுப்பதாக எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார் என்று என்னிடம் அவர் தெரிவித்தார்.
உங்களை நான் ஜூலை 15 அன்று அழைக்கிறேன் என்று தெரிவித்தார். இதுவரை என்னை அழைக்கவில்லை. நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுது என்னுடைய என்னை அவர் பிளாக் செய்தது தெரியவந்தது. அதற்குப் பிறகு ஜூலை 17 அன்று எஸ்.பி.வேலுமணி உதவியாளர் வினோத் என்னை பலமுறை செல்போனில் அழைத்து இன்று உங்களை நான் சந்திக்கிறேன் என்று தெரிவித்தார்.
பின்னர் மாலை 6 மணிக்கு ஆர்எஸ் புரம் காபி டீ கடைக்கு வருமாறு தெரிவித்தார். ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா ஹோட்டல் நகராட்சி பள்ளி வளாகத்தில் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் பார்த்திபன், வினோத் இருவரையும் சந்தித்தேன். இவ்வளவு நாட்கள் பொறுத்து பணத்தை திடீர் எனக் கேட்கிறீர்களே என்று சத்தம் போட்டனர்.
பணியும் ஒதுக்காமல், வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறீர்களே என்று நான் சொன்னதற்கு நாங்கள் பணத்தை கொடுக்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள் எங்களை அவசரப்படுத்தினீர்கள் என்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடும் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
நீங்கள் நாளை எஸ்.பி.வேலுமணியை நேரில் பாருங்கள் என்று என்னை அழைத்துச் சென்ற இடத்தில் விட்டு விட்டு சென்று விட்டார்கள். நான் (ஜூலை 19) மறுநாள் முன்னாள் அமைச்சர் வேலுமணியை அவரது இல்லத்தில் காலை சுமார் 11 மணியளவில் சந்தித்தேன். அப்போது அவரிடம் நேற்று உங்கள் உதவியாளர் பார்த்திபன் மற்றும் வினோத் இருவரையும் சந்தித்தேன் என்று கூறினேன்.
அதற்கு எஸ் பி வேலுமணி இனிமேல் என்னிடம் நீ கொடுத்த பணம் சம்பந்தமாக என்னை சந்திக்க வரக்கூடாது என்று கடுமையாகப் பேசி இதற்கு மேல் மீறி வந்து பணம் கேட்டால் உன்னை உன் குடும்பத்தையும் அழித்து அட்ரஸ் இல்லாமல் தொலைத்து விடுவேன், என்றும் எனது செல்வாக்கும் என்னவென்று தெரியுமல்லவா என்று மிரட்டி அனுப்பி வைத்தார்.
இது சம்பந்தமாக பல்வேறு குறுஞ்செய்தி, பேச்சுப்பதிவு மற்றும் பிற ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் ஒதுக்குவதாக பொய்யுரைத்து என்னிடம் ஏமாற்றி பணம் ரூ.1,20,00,000 பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியையும், அவரது உதவியாளர்கள் பார்த்திபன், வினோத் ஆகியோர் மீதும் என்னை ஏமாற்றியது தொடர்பாகவும், என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தருமாறும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைப்பெற்ற போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தி புகார் உண்மை எனத் தெரிந்தால் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications