Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கவுண்டில் வந்து விழுந்தது ரூ.1,000.. கூடுதலாக 1.48 லட்சம் பெண்களுக்கு கிடைத்த உரிமைத்தொகை மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்கனவே உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கப்பட்டு வருபவர்களோடு கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு இன்று மகளிர் உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இந்த உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.

magalir urimai thogai kalaignar magalir urimai thogai tamilnadu

மகளிர் உரிமைத்தொகை: இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமை தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலரும் விமர்சனங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக, மீண்டும் மேல்முறையீடு செய்த விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு 2023 நவம்பர் மாதம் முதல் கூடுதலாக 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

கூடுதல் பயனாளிகள்: தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி, பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ. 1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் தவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்தனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் கடந்த் மாதம் 11.85 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்தனர்.

இன்று வரவு வைக்கப்பட்டது: இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தது. மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்தது. இவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 15 ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 1.48 லட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. புதிதாக இணைந்த பயனாளிகளுக்கு இனி மாதாமாதம் 15ஆம் தேதி அன்று ரூ. 1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

1 கோடியே 15 லட்சத்து 32 ஆயிரம் பெண்கள்: கடந்த மாதம் வரை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 பெண்கள் பயனாளிகளாக இணைந்துள்ளனர். இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024 ஆம் நிதியாண்டில் 8123.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 ஆம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 15 லட்சத்து 32 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் பயனடைகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+