சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி மேம்பாலத்தில் ஒன்றரை கிலோ தங்கத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் பறித்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சியைடந்த ஊழியர்கள் ஜிஎஸ்டி அலுவலகம் ஓடியபோது அங்கே பயங்கர ட்விஸ்ட் காத்திருந்தது.. விசுவாசமாக இருந்த ஊழியரே நண்பர்களுடன் சேர்ந்து போட்ட அந்த துரோக ஸ்கெட்ச் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.. என்ன நடந்தது சென்னையில்?

சென்னை சவுகார்பேட்டை, பெரியநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராவல்சிங் (30). கடந்த மாதம் 6ம் தேதி, இவரது பார்சல் சர்வீஸ் அலுவலகத்துக்கு, மும்பையில் உள்ள மற்றொரு கூரியர் நிறுவனம் மூலம் ஒன்றரை கிலோ தங்க நகை பார்சல், மீனம்பாக்கம் கார்கோ விமான நிலையம் வந்தது.

Chennai Guindy 1 5kg Gold Parcel GST

கிண்டி மேம்பாலம்

அப்போது கார்கோ கூரியர் நிறுவன ஊழியர் மற்றும் சவுக்கார்பேட்டை பார்சல் சர்வீஸ் ஊழியர் ஜிதேந்தர் குமார் ஆகியோர், நகை பார்சலை பெற்று பைக்கில் சவுக்கார்பேட்டை நோக்கி புறப்பட்டனர்.

கிண்டி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, காரில் வந்து வழிமறித்த 2 பேர், ஜிஎஸ்டி அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஒன்றரை கிலோ நகை பார்சலை பறித்து கொண்டு விசாரணைக்கு ஜிஎஸ்டி அலுவலகம் வருமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

தங்க நகை பார்சல்

இதுகுறித்து கூரியர் நிறுவன உரிமையாளர் ராவல் சிங்கிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து அவர் ஜிஎஸ்டி அலுவலகத்தில் விசாரித்தபோது அப்படி யாரும் பார்சலை பெறவில்லை என்று பதில் கிடைத்துள்ளது.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராவல் சிங், உடனடியாக கிண்டி போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து சென்னை முழுவதும் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பார்சல், சர்வீஸ் மற்றும் கூரியர் சர்வீசில் பணி புரியும், 10க்கும் மேற்பட்ட ஊழியர்களின் செல்போன்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாரிடம் ஜிதேந்தர்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது தங்க நகை பார்சலை திருடியதாக ஜிதேந்தர்குமார் ஒப்புக்கொண்டார்.

சென்னை லாட்ஜ்

அவர் கொடுத்த வாக்குமூலத்தில் "குஜராத்தை சேர்ந்த தன்ராஜ் சர்மா (30) என்னுடைய பள்ளிக்கூட நண்பன்.. சென்னை விமானநிலைய கார்கோ மூலம் அடிக்கடி தங்க நகை பார்சல் வரும் விஷயத்தை தன்ராஜ் சர்மாவிடம் சொன்னேன்.. உடனே தன்ராஜ் சர்மா, சென்னைக்கு வந்து ஒரு லாட்ஜில் தங்கினான்.. அந்த லாட்ஜில் வைத்துதான் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை தீட்டினோம்..

அதன்படி, கடந்த மாதம் 6ம் தேதி தங்க நகை பார்சல் ஏர்போர்ட்டுக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.. சக ஊழியர்களுடன் நான் நகை பார்சலை எடுத்து கொண்டு வந்தேன்.. கிண்டி மேம்பாலம் அருகே வந்தபோது, ஏற்கனவே திட்டமிட்டபடி என்னுடைய நண்பர்கள் ஜிஎஸ்டி அதிகாரிகள் போல் நடித்து மிரட்டி, எங்களிடமிருந்து நகை பார்சலை பறித்து தாம்பரம் சென்றுவிட்டார்கள்.

சுற்றி வளைத்து கைது

இதற்கு எங்களுக்கு உடந்தையாக, ராம் ரகுநாத், கேசவராம், ரன்வீர், யுவராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.. கொள்ளையடித்த ஒன்றரைகிலோ தங்கத்தை குஜராத்துக்கு கொன்று சென்றுவிட்டனர்" என்று வாக்குமூலம் தந்தார்..

இதையடுத்து கிண்டி குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் இருந்த தன்ராஜ் சர்மாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராம் ரகுநாத் சிங் (30) என்பவரை தனிப்படை போலீசார் குஜராத்தில் கைது, சென்னை கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+