சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 2000த்திற்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு.. சென்னையில் 512 பேர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை, இன்று, 2,000க்கு கீழ் குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

1,939 people in Tamil Nadu have been confirmed to be affected by corona

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 17,748 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.

இதில், அரசு மருத்துவமனைகளில் 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,454 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 3,758 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா கிடக்கட்டும்.. ஆயிரம் வாலா என்ன விலை கேளு.. தீவு திடலில் அலை மோதும் மக்கள்.. இதுதான் சென்னை!கொரோனா கிடக்கட்டும்.. ஆயிரம் வாலா என்ன விலை கேளு.. தீவு திடலில் அலை மோதும் மக்கள்.. இதுதான் சென்னை!

சென்னையில், 24 மணி நேரத்தில் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு பண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 72,629 பேருக்கும், இதுவரை 1,06,58,89 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A further 1,939 people in Tamil Nadu have been confirmed to be affected by corona. A further 2,572 people recovered from corona in Tamil Nadu were discharged. The number of people being treated for coronavirus disease across Tamil Nadu has dropped to 17,748. Another 14 people died of corona in Tamil Nadu.Of these, 7 died in government hospitals and 7 in private hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X