இனிமே "பாரத் ரைஸ்" இங்கேயும் கிடைக்கும்.. வெறும் 29 ரூபாய்.. மத்திய அரசு ஹேப்பி நியூஸ்.. மக்கள் குஷி
சென்னை: சாமான்ய மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிற மத்திய அரசின் பாரத் அரசி திட்டம்.. தற்போது இதுகுறித்து குட்நியூஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது.. அதாவது இந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்து விட்டது.. அதனால்தான், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கு 'பாரத் அரிசி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

கோதுமை: பாரத் கோதுமையை போலவே, இந்த பாரத் அரிசியையும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்... 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைக்க போகிறதாம்..
"பாரத் ரைஸ்" என்ற பெயரில், கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்பட உள்ளது.. இதில், தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் கிடைக்கும்.
மத்திய அரசு: இந்த அரிசியை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில், பாரத் அரிசியை விற்கின்றன.. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்குமாறு, மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்தியிருக்கிறது.
அதாவது, குறிப்பாக, 100 டன் அளவுக்கு பாரத் ஆட்டா, குறிப்பிட்ட அளவு அரிசியை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்குமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறதாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, தமிழக மக்களுக்கு பெரும் பலனையும், வரவேற்பையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
பாரத் அரிசி: இந்நிலையில், ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. இத்தனை நாட்களாக ரிலையன்ஸ் கடைகளில் மட்டும் கிடைத்த பாரத் அரிசி இனி விஷால் மெகா மார்ட், ஸ்டார் பஜார், ஜியோ மார்ட் உள்ளிட்ட பல கடைகளில் விற்பனை செய்யப்படும். இதுதவிர, ஆன்லைனிலும் இந்த அரிசி கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும்கூட, பாரத் அரிசி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி மூட்டை: அதேபோல இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்பதால், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இந்த பாரத் அரிசி திட்டம் இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காரணம், இந்த அரிசி மூட்டையில் பிரதமர் மோடி உட்பட யாருடைய போட்டோவும் பயன்படுத்தப்படவில்லை.. எந்த கட்சியின் சின்னமும் பயன்படுத்தப்படுவதில்லை..
தேர்தல் நேரத்தில், வாக்குகளை குறி வைத்தே, பாஜக அரசு இந்த அரிசி விநியோகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், இப்படி ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications