Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கட்சி அவுட்.. உள்ளே வரும் 2 புதிய கட்சிகள்.. விஸ்வரூபம் எடுக்கும் திமுக கூட்டணி! மொத்தமாக மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் சில முக்கியமான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 லோக் சபா தேர்தலில் திமுக கட்சியானது காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ,மதிமுக , விசிக , ஐஜேகே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் தமிழ்நாட்டில் தேனி தொகுதி தவிர மற்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக கூட்டணி வென்றது.

இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Party out, 2 Party in: Is the DMK alliance scenario completely changing in Tamil Nadu?

தமிழ்நாட்டில் இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளியேறுவது உறுதியாகி உள்ளது. அதற்கு பதிலாக இரண்டு புதிய கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன.

வெளியேறும் கட்சி: திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வருகிறார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.

இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். இதன் மூலம் பாஜக கூட்டணியில் இவர் இணைவது உறுதியாகி உள்ளது. பாரி வேந்தர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கள்ளக்குறிச்சி தேர்தலில் பாரி வேந்தரை களமிறக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது திராவிட இயக்குங்களை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும்.

நான் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தேன். அப்போது 2.40 லட்சம் வாக்குகள் பெற்று வென்றேன். அதன்பின் வேறு கூட்டணிக்கு சென்றேன். நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. நான் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் வென்று இருப்பேன், என்று குறிப்பிட்டார். இதனால் அவர் திமுகவுடன் உறவை முறித்துக்கொள்வது உறுதியாகி உள்ளது.

உள்ளே வரும் 2 கட்சிகள்: இந்த நிலையில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் இந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வந்தார்.

முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

இதனால் அவர் திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் உள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. தேமுதிக அழைக்கப்படவில்லை. பொதுவாக விஜயகாந்த் மீது மோடிக்கு தனிப்பட்ட அன்பு மரியாதையை உண்டு.

இவர்கள் சந்திக்கும் சமயங்களில் விஜயகாந்தை மோடி கட்டி அணைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாஜக தேமுதிகவை சீண்டி கூட பார்க்கவில்லை. தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.. அவர்கள் வந்தால் நமக்கு பயன் இருப்பதை விட பிரச்சனையே இருக்கும்.

அவர்கள் தேவையில்லாத சுமைதான் என்று ரிப்போர்ட் சென்றதால் தேமுதிகவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தங்களை அழைக்காமல் அப்செட் செய்துள்ளது.

இனி அதிமுக கூட்டணிக்கு செல்வது கடினம். அவர்கள் நம்மை மதிக்கவில்லை. மூன்றாவது கூட்டணி அமைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாத காரியம். அதனால் திமுகவுடன் இணைந்துவிடலாம். இப்போதே திமுகவுடன் நட்பாக்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பிரேமலதா போன் செய்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை பற்றி பிரேமலதா பேசி உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+