திமுக என்ன செய்ய போகிறது?.. பாமகவின் அடுத்த மூவ்?.. 40 ஆண்டு பாமக போராட்டத்துக்கு பின்னடைவா?

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் திமுக என்ன செய்ய போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10.5 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், இதன் போக்கு எத்தகைய பாதையில் பயணிக்க போகிறது? பாமக இதை எப்படி எதிர்கொள்ளும்? திமுக மேற்கொள்ள போகும் சட்டவடிவங்கள் என்ன? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வன்னிய சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் கையில் எடுத்தார்.. கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவு செய்துவிட்ட நிலையில், பாமக மட்டும் இடஒதுக்கீடு விஷயத்தில் பிடிவாதம் பிடித்தது.

இதனால் கூட்டணி வைக்க அதிமுக மேலிடம் பலவாறு முயற்சி மேற்கொண்டது.. ஆனால், ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை.. போராட்டத்தை அறிவித்தார்.

 போராட்டம்

போராட்டம்

சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் அலுவலகம் முற்றுகை, மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் என புதிய முறைகளில் போராட்ட வடிவம் அரங்கேற்றப்பட்டது.. இதன் தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது... ஆனால், ஆரம்பத்தில் பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு தொடக்கத்தில் செவிசாய்க்காத எடப்பாடி அரசு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது... அதில், வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பாமக

பாமக

இதையடுத்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்தது.. வடமாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்கான தொகுதிகளை பாமக கேட்டு வாங்கி கொண்டது.. பாமகவின் கோரிக்கைக்கு அதிமுக உடனே ஓகே சொல்ல காரணம், 2019 எம்பி தேர்தலோடு சட்டமன்ற தொகுதிகளுக்காக நடந்த இடைத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததால் சில தொகுதிகளில் அதிமுக பலனை பெற்றதுதான்...

Recommended Video

    வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து!
     கோரிக்கை

    கோரிக்கை

    இது பாமகவுக்கு சாதகமான முடிவை தரவில்லை என்றாலும், அதிமுகவுக்கு சாதகத்தை பெற்று தந்தது. இதைதவிர திமுகவை எதிர்கொள்ள வேறு வழியில்லாமல் பாமகவை சமாதானப்படுத்தி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு எடப்பாடிபழனிசாமி ஆளானார்.

    பாமக

    பாமக

    அதுமட்டுமல்ல, ஒருபடி மேலேச் சென்று "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரச்சார கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசியபோது, வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும் என்று கூறினார்.. ஸ்டாலின் இப்படி சொன்னதுமே பாமக விக்கித்து பார்த்தது.. காரணம், கடந்த 5 வருட காலங்களில் திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது பாமகதான்..

    அரசாணை

    அரசாணை

    மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் திமுக அரசிடம் முனவைக்கப்பட்டன... 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசும் வெளியிட்டது.. தமிழகத்தில் அடுத்தடுத்து வரப்போகும் தேர்தல்களை கணக்கில் கொண்டே திமுகவும் இந்த அரசாணையை வெளியிட்டதாகவே கருதப்பட்டது. அதற்கான வெளிப்பாடாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வட மாவட்டங்களில் கணிசமாக வென்றது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதன்காரணமாகவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்களில் பெருத்த அதிருப்தியை அறுவடை செய்துள்ளதையும் மறுக்க முடியாது.. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள் ஒதுக்கீடு இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று காரணம் கூறியுள்ளது.. ஒரு கமிஷனோ, சாதிவாரி கணக்கெடுப்போ நடத்தப்படாமல் ஒதுக்கீடு அளித்தது தவறு என்ற கோர்ட் ... நீதிமன்றமே இப்படி ஒரு உத்தரவை வழங்கி உள்ளதால், பாமக இதை எப்படி அணுக போகிறது? என்ற ஆர்வம் எழுந்துள்ளது..

    உத்தரவு

    உத்தரவு

    அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று காரணம் கூறியுள்ளது.. ஒரு கமிஷனோ, சாதிவாரி கணக்கெடுப்போ நடத்தப்படாமல் ஒதுக்கீடு அளித்தது தவறு என்ற கோர்ட் ... நீதிமன்றமே இப்படி ஒரு உத்தரவை வழங்கி உள்ளதால், பாமக இதை எப்படி அணுக போகிறது? என்ற பரபரப்பான ஆர்வம் எழுந்துள்ளது..

     கோரிக்கை

    கோரிக்கை

    அதுமட்டுமல்ல, 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிலும் இதே வாதங்கள் வைக்கப்பட்டும், 69% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது ஹைகோர்ட் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு என்ற கருத்தை முன்வைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், அதை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     நெருக்கடி

    நெருக்கடி

    நீதிமன்றமே ரத்து செய்து உத்தரவிட்டுவிட்டதால், திமுக இந்த விஷயத்தில் ஆலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளது.. என்ன முடிவை திமுக எடுக்க போகிறது? மேல் முறையீடு செய்யுமா? அல்லது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+