தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யுமாம்.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கத்தரி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரத்தில் சில மாவட்டங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து கொளுத்தும் வெயிலுக்கு இதமளிக்கிறது.
ஆனால் கடுமையான வெப்பமும் தண்ணீர் பஞ்சமும் நீடிக்கும் சென்னையில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இடியுடன் கனமழை
இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை வரை
40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சனிக்கிழமை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேகமூட்டம்
அதே நேரத்தில் மழை பெய்யாத இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பபட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணியில் அதிகம்
இதனிடையே தமிழகத்தில் நேற்று 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications