ஹாட்.. பாஜகவுக்கு 10 - 7 சீட்களா.. "மேட்டருக்கு" வந்த மேலிடம்.. அடடடே காய்நகர்த்தல்.. அப்ப எடப்பாடி
சென்னை: வரும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக மொத்தம் 10 தொகுதிகளை குறி வைத்து, களப்பணியில் இறங்க போவதாக செய்திகள் பரபரக்கின்றன.
திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு, தமிழக பாஜகவும் தன்னை சமீபகாலமாகவே தயார்படுத்தி வருகிறது.. அதற்கேற்றபடி, தாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற மாயையை, கட்டவிழ்த்து விட்டுள்ளதில் பாஜக ஓரளவு வெற்றியை பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்..
மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசியதில், சில முக்கிய புள்ளிகளும் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
எடப்பாடி பேச்சை மீறிய ஈபிஎஸ் டீம் மாஜி..? ஜெயலலிதாவுக்கு இன்றே திதி கொடுத்த ஓஎஸ் மணியன்! பரபர!

ஹாட் சீட்ஸ்
குறிப்பாக, கொங்கு மண்டலத்தை நோக்கியே வலையை வீசி வருகிறதாம் தமிழக பாஜக.. ஒருபக்கம் செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துக் கொண்டே மறுபுறம், திமுகவின் மகளிர் அணி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க மும்முரம் காட்டி வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறுகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, தங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை பாஜக டாப் லிஸ்ட்டாக கையில் எடுத்துள்ளது.. குறிப்பாக, தென் சென்னை, நாமக்கல், கரூர், தூத்துக்குடி, நெல்லை, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட போகிறதாம்..

குறி குமரி
முதலிடமாக கன்னியாகுமரிதான் லிஸ்ட்டில் உள்ளது.. பாஜக வலுவான தொகுதி.. இந்த குமரியில்தான், பாஜகவுக்கு எல்லா காலகட்டத்திலும் பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள்.. எம்பி தேர்தல்களின்போது, பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் சரி, அல்லது தனித்து போட்டியிட்டாலும்சரி, ஒரு தொகுதியில் தவறாமல் போட்டியிடுகிறார்கள் என்றால், அது இந்த கன்னியாகுமரிதான்.. அந்த அடிப்படையில்தான், குமரியை முதல் தொகுதியாக குறி வைத்துள்ளனர்.

தமிழிசை
தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை, கடந்த எம்பி தேர்தலின்போது, தமிழிசை களமிறங்கிய தொகுதியாகும்.. கனிமொழிக்கு எதிராக களவாடிய தொகுதியாகும்.. கடந்த முறை தமிழிசை இங்கு போட்டியிட்டபோதே, பூத் கமிட்டி லெவலில் இறங்கி பாஜகவினர் சிறப்பான கட்டமைப்பை செய்து வைத்துள்ளனர்.. அதனாலேயே இந்த முறையும் தூத்துக்குடியை குறி வைத்துள்ளார்கள்.. ஆனால், வரும் தேர்தலில், தமிழிசை இங்கு மீண்டும் போட்டியிடுவது சந்தேகம் என்கிறார்கள்.. அநேகமாக தென்சென்னை அல்லது கோவையில் தமிழிசை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

புனித சித்தாந்தம்
அடுத்ததாக ராமநாதபுரம் மக்களவை தொகுதியை பாஜக குறி வைத்துள்ளது.. காரணம் இது அவர்களின் சித்தாந்தம் அடிப்படையிலானது.. அதாவது வடக்கில் காசியும், தெற்கில் ராமேஸ்வரமும் இந்துக்களான புனித தலமாகும்.. காசியை உள்ளடக்கிய வாரணாசி தொகுதி வடக்கில் உள்ளதுபோல, தெற்கில் ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுர தொகுதியையும் வளைத்து பிடித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் முனைப்பாக உள்ளது..

தென்கோடி மோடி
அதனால்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது. இந்த முறையும் ராமநாதபுரம் லிஸ்ட்டில் உள்ளது. அதுமட்டுமல்ல 2014 எம்பி தேர்தலின்போது, தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த ஒருசில தொகுதியில் இந்த ராமநாதபுரமும் ஒன்றாகும்.. இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. இந்த முறை ராமநாதபுரதத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற விருப்பமும் தென்கோடியில் இருந்து கிளம்பி வருகிறது.

இரும்பு கோட்டைகள்
கன்னியாகுமரி போலவே, பாஜக வலுவாக உள்ள தொகுதி கோவை ஆகும்.. பாஜக சீனியர்கள் பெருவாரியாக வலம்வரும் தொகுதியும் இதுவாகும்.. அதிமுக கோட்டையான கோவையை, தங்கள் கோட்டையாக மாற்றும் முயற்சியில் பாஜக இறங்கிவருகிறது.. உள்ளாட்சி தேர்தல், கோவையை விட்டுத்தரும்படி கேட்டும் அதிமுக கூட்டணி மறுத்ததால், தனித்து போட்டியிடும் நிலைமையே வந்துவிட்டது. அந்த அளவுக்கு பாஜகவுக்கு கோவைமிக முக்கியமான தொகுதியாகும்.

மலை மாவட்டம்
நீலகிரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும், பாஜக போட்டியிட்ட தொகுதி.. 2019 எம்பி தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் நீலகிரியை பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற செய்திகளும் வந்தன.. இந்த முறை பாஜக நீலகிரியை குறி வைத்துவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.. தொகுதியில் ஓபனாகவே இறங்கி தேர்தல் வேலையையும் பார்க்க துவங்கிவிட்டார்களாம்.

பிராமணர்கள்
தென்சென்னை எம்பி தொகுதியை பொறுத்தவரை, பாஜக குறி வைத்துள்ளது. காரணம், இது படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் தொகுதி.. பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதியும்கூட.. கடந்த 2014 தேர்தலில், அதிமுக அபார வெற்றி பெற்றநிலையில், சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் திமுகவை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தனர்.. இதில் தென்சென்னையில் போட்டியிட்ட மூத்த தலைவர் இல.கணேசன், நூலிழை வித்தியாசத்தில்தான் வாய்ப்பை தவறவிட்டிருந்த நிலையில், இந்த முறை தென்சென்னையை பாஜக தட்டி தூக்க பிளான் செய்துள்ளதாம்.

ப.சி + ஹெச்.ராஜா
சிவகங்கையில் பல முறை பாஜக போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் இந்த தொகுதியை விடாமல் உள்ளதாக தெரிகிறது.. அதுபோலவே. எச்.ராஜாவையும் விடாமல் களமிறக்கும் என தெரிகிறது.. மூத்த தலைவர் எச்.ராஜா, ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவகங்கையில் களமிறங்கியபோதே, இது எப்போதோ ஸ்டார் தொகுதி ஆகிவிட்டது.. ப.சிதம்பரம் ஒருபக்கம் என்றால், எச்.ராஜா மறுபுறம் என மிகுந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த தொகுதி ஏற்படுத்திவிட்டு போகும். இந்த முறையும் டாப் 10லிஸ்ட்டில் சிவகங்கை உள்ளது. முதல்கட்டமாக, 10 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்தாலும், அதில் 7 தொகுதிகளில் மட்டுமே, நிறைய பிளான்களுடன் இறங்கி உள்ளது.. இந்த 7 தொகுதிகளுமே, இயல்பாகவே பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கை தரக்கூடிய தொகுதிகள்தான்..

நியூ ஜாயிண்ட்
ஆனால், மிச்சமுள்ள 3 தொகுதிகளை சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறதாம்.. காரணம், இந்த 3 தொகுதிகளும், காலங்காலமாகவே அதிமுக, திமுகவுக்கு பலம் தரும் தொகுதிகள் என்பதால், இங்குதான் பாஜக "நியூஎன்ட்ரி" தரப்போகிறதாம்... இந்த 3 தொகுதிகள் அநேகமாக தென்மண்டலங்களை சார்ந்ததாகவே இருக்கும் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளும் நடக்கிறது என்கிறார்கள்.. அதாவது, எல்லா தொகுதிகளுக்கும் குறி வைத்து, பணத்தை வாரி இறைப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு இறங்கி களப்பணியாற்றினால், நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.. அதற்காகவே, திமுக அரசின் டேமேஜ்களை வெளிப்படுத்தி கொண்டே, மற்றொருபுறம், மோடி அரசின் சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்வது என்ற வியூகங்களுடன் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது..!!!