30 "திமிங்கிலம்".. 100 கோடியாமே.. டோட்டலா போச்சா.. ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி.. ரிட்டர்ன் ஆகும் தலை
எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு எதிரான காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்
சென்னை: ஹைகோர்ட் உத்தரவுக்கு பிறகு, ஓபிஎஸ் + சசிகலா டீம் சைலண்ட்டாக உள்ளதாம்.. அதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி, தன் பணியில் வேகம் எடுத்து வருகிறார்.
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு எப்படியும் காலதாமதமாகும் என்கிறார்கள்..
எம்பி தேர்தல் வரை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்று தெரிகிறது. எனினும், எடப்பாடியின் பிடிவாதம் திமுகவுக்கு பிளஸ் ஆகி கொண்டிருக்கிறது..

11 எம்எல்ஏக்கள்
ஓபிஎஸ்ஸுடன் சசிகலா, டிடிவி தினகரன் சேர்ந்தாலும் அந்த அளவுக்கு பிரயோஜனம் இருக்காது என்கிறார்கள்.. காரணம், அன்று 11 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு, ஜெ.சமாதியில் தியானம் செய்து கட்சியை உடைத்தவர் ஓபிஎஸ்தான் என்ற பிம்பம் இன்னமும் கட்சிக்குள் உள்ளது.. அதேபோல, சசிகலாவை அன்று வெளியே துரத்தியதும் ஓபிஎஸ்தான் என்பதையும், டிடிவி தினகரன் விரட்டியடித்தது ஓபிஎஸ்தான் என்பதையும், தொண்டர்கள் மறக்கவில்லை..

ரத்தத்தின் ரத்தங்கள்
போதாக்குறைக்கு, பொதுக்குழு அன்று கட்சி ஆபீசில் செய்த கலாட்டா, கோர்ட் வரை சென்றுவிட்டதையும் ரத்தத்தின் ரத்தங்கள் வேடிக்கை பார்த்தனர். எனவே, எடப்பாடி தனித்து செல்வாக்கை காட்டினாலும், அல்லது ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி இணைந்தாலும், பெரிய அளவுக்கு வாக்கு சதவீதம் தங்களுககு பாதிக்காது என்று திமுக கணக்கு போடுகிறது.. மற்றொரு பக்கம் அதிமுகவுக்குள்ளேயே இது திருப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றத்தை தராது என்கிறார்கள்.

ஷாப்பிங் மால்
இந்த முறை ஹைகோர்ட் உத்தரவு எடப்பாடிக்கு சாதகமாக வந்ததில், ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்து, அதிர்ந்து போயுள்ளது சசிகலா தானாம்.. கடந்த முறை தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியபோது, அளவுகடந்த குஷிக்கு சென்றாராம் சசிகலா.. இந்த உத்தரவானது எடப்பாடி பழனிசாமிக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டதால், தன்னுடைய பிறந்தநாள் விழாவையே, சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார் சசிகலா.. அந்த அளவுக்கு எடப்பாடியின் வீழ்ச்சி, சசியை தெம்பூட்டிய நிலையில், இந்த முறை அப்படியே டோட்டலாக நீதிமன்ற உத்தரவு மாறிவிட்டது.

பச்சைக்கொடி
இதனால், சில விஷயங்கள் அடுத்தக்கட்ட செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது.. முதலாவதாக, எடப்பாடி டீமில் இருப்பவர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை ஓபிஎஸ் மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு சசிகலா தரப்பில் ஆதரவு பச்சைக்கொடி காட்டப்பட்டது.. அதிலும் 30 எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்கப்பட்டது.. இதைதவிர, 27 மாவட்ட செயலாளர்களிடம் சசிகலாவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது.. இந்த அணி தாவல் முயற்சிக்காக 100 கோடி ரூபாயை களமிறக்கவும், சசிகலா தரப்பு ஓகே சொல்லிவிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், இந்த பணி அப்படியே நிற்கிறதாம்,.

ஓடு.. ஓடு..
அடுத்ததாக, கடந்த ஒரு மாத காலமாகவே, ஓபிஎஸ் பக்கம் வருவதாக சொல்லியிருந்த முக்கிய புள்ளிகள் சத்தமில்லாமல் இருக்கிறார்களாம்.. விரைவில் உங்கள் பக்கமே வந்துவிடுகிறோம், கோர்ட் தீர்ப்பு வந்துவிடட்டும் என்று சொல்லியவர்கள், தற்போது ஜகா வாங்கிவிட்டதாகவும் தெரிகிறது.. இதுவும் சசிகலா + ஓபிஎஸ் டீமுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கோவையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருந்த நிலையில், திடீரென அந்த பிளானும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது அதை இப்போது காஞ்சிக்கு மாற்றிவிட்டார்கள்..

கோவை - காஞ்சிபுரம்
காரணம், எடப்பாடியின் செல்வாக்கு + மேற்கு மண்டலத்தின் லாபி + சாதகமான நீதிமன்ற உத்தரவுகள் போன்றவைகள் ஓபிஎஸ் + சசிகலா டீமுக்கு எரிச்சலை கிளப்பி உள்ளதாம்.. ஒருவேளை கோவையில் நிகழ்ச்சி நடத்தி, எடப்பாடியின் செல்வாக்கு தங்களுக்கு இல்லாமல் போய்விட்டால் என்னாவது என்ற கலக்கம் காரணமாகவே, இப்படி ஒரு பிளான் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. போதாக்குறைக்கு எடப்பாடிக்கு, முக்குலத்தார் சமுதாயத்தினரின் மத்தியில் செல்வாக்கும் கூடிவிட்டது, இன்னொரு ஓபிஎஸ் + சசிகலா டீமின் ஜெர்க்குக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ட் + ஸ்மார்ட்
அதுமட்டுமல்ல, தற்சமயம் வந்துள்ள தீர்ப்பு காரணமாக, யாரும் தங்கள் பக்கம் வர வாய்ப்பு இல்லை என்பதாலும், இனி அடுத்தடுத்து கோர்ட் விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டி உள்ளதாலும், ஓபிஎஸ் டீம், அடுத்தக்கட்ட சமாச்சாரங்களில் பிஸியாகிவிட்டது.. இதுவும் எடப்பாடி டீமுக்கு வலுவாகி விட்டது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் பக்கம் சென்றவர்களையும் இங்கே கொண்டு வரும் வேலையை எடப்பாடி ஸ்டார்ட் செய்துவிட்டாராம்.. இதனால், உள்ளதும் போச்சுடா என்று நொந்து கொண்டிருக்கிறார்களாம்.. இப்படி புது புது தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், வழக்கம்போல அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்











Click it and Unblock the Notifications