வெளுத்திய வெய்யில்.. கொளுத்திய வெப்பம்.. இந்த 3 நாளைக்கு ஜாக்ரதை மக்களே.. ஆனாலும் ஒரு ஆறுதல் செய்தி
சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேசமயம், வெப்பமும் கொளுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோச்சா புயல் காரணமாக தமிழகத்துக்கு பாதிப்பு வராது என்று முன்கூட்டியே கணித்து சொல்லியிருந்தனர் வானிலை ஆய்வாளர்கள்.. ஆனால், தமிழகமெங்கும் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மழை பாதிப்பு: எதிர்பார்த்தபடி இல்லாவிட்டதாலும், ஓரளவு மழை கொட்டியது.. மோச்சா புயல் கரையை கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் அதாவது 16, 17-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்: இதுஒருபக்கம் ஆறுதலை தந்தாலும், மறுபக்கம் வெயில் கொளுத்தி எடுக்கும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.. தமிழ்நாட்டில் நேற்றுகூட, சென்னை, வேலூர் உட்பட 16 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது... மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
100 டிகிரி வெயில்: சென்னையில் நேற்றும் வெப்பம் சதம் அடித்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் 105 புள்ளி 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிக அளவாக வேலூரில் 108 புள்ளி 14 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், திருத்தணியில் 105 புள்ளி 8 ஃபாரன்ஹீட்டாகவும் பதிவாகியுள்ளது.

இதே போன்று, திருச்சி, தஞ்சை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாகை, நாமக்கல், சேலம், பாளையங்கோட்டை உட்பட 16 இடங்களில் வெயில் நூறு டிகிரிக்கும் கூடுதலாக பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 102 டிகிரி ஃபாரன்டிட் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
வானிலை மையம்: அதுமட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications