சென்னையே துள்ளுது.. ஊருக்கு போறீங்களா.. அரசின் மாஸ் அறிவிப்பு.. அதைவிடுங்க.. 100 எலக்ட்ரிக் பஸ் வருது
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அடுத்த அதிரடியை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அத்துடன், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்னொரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சொன்னதாவது:
சென்னை மாநகர்: சென்னை மாநகரில் முதல்கட்டமாக, 100 எலக்ட்ரிக் பஸ்களை பரிட்சார்த்த முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, தமிழகம் முழுவதுமே எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 685 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படாததால், பஸ் சேவை, பல இடங்களில் தடையாகி உள்ளது. அதை சீர் செய்து வருகிறோம்.
அடுத்த 4 மாதத்திற்குள், 4000 புதிய பஸ்கள், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். எல்லா பஸ்களையும் நிறம் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. புறநகர் பஸ்களை மட்டுமே மாற்றுகிறோம். சென்னையில் ஓடும், 2,500 பஸ்களில் நிர்பயா திட்டத்தின் கீழ், சிசிடிவி கேமராக்கள் முழுதுமாக பொருத்தப்பட்டு விட்டது" என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications