100 ஆண்டு பழசு.. சென்னை மண்ணடியில் இடிந்த 4 மாடி கட்டிடம்! 4 பேர் நிலை என்ன? களத்தில் மேயர் பிரியா
சென்னை: மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் அமைந்து இருந்த பழமையான கட்டிடம் புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றாக மண்ணடி இருக்கிறது. இங்கு 50 ஆண்டுகள், 80 ஆண்டுகள், 100 ஆண்டுகளை கடந்த பழைய கட்டிடங்கள் உள்ளன. அங்குள்ள அரண்மனைக்காரன் வீதியில் பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருந்தது. இதனை புனரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்து இருக்கின்றன.

இந்த நிலையில் இன்று கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென மளமளவென இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களின் பெரும்பகுதியும் இடிந்து விழுந்து இருக்கின்றன. கட்டிட பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் அது வதந்தி என்றும், 2 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுகலான பாதையில் கட்டிடம் அமைந்து இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அழைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்கு விரைந்து உள்ளது. கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்தவுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி தெரிவித்து இருக்கிறார்.
குறுகலான பாதை என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் நவீன கருவிகள் உள்ளன. அவர்களை அழைத்து உள்ளோம்." என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications