பெரிய வேலைய பார்த்துவிட்ட SIR.. 103 தொகுதிகளில் 10%க்கு அதிகமான வாக்காளர் குறைவு! தேர்தலில் தாக்கம்?
சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலுமே வாக்காளர் எண்ணிக்கு குறைந்துள்ளது. 103 சட்டசபை தொகுதிகளில் 10%க்கும் மேலாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்உ நவம்பர் 4 ஆம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. தகுதியான வாக்காளர்கள் புலம் பெயர்ந்தவர்கள், இறப்பு, இடம் மாற்றம் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பின், 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால், 103 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. 26 தொகுதிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பெயர் நீக்கத்தில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண், 14,64,344 பெண், 829 இதரர் என மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 11,73,758 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பட்டியலில் சென்னை மாவட்டத்தின் சட்டசபை தொகுதிகளே முதல் 9 இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் 35.4 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைவான அளவில் வாக்காளர்கள் நீக்கம் என்றால், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
10 சதவீதத்துக்கும் அதிகமான நீக்கம் தேர்தலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானதுமே சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்கு வாக்கு இல்லை என்று புலம்பியதைப் பார்க்க முடிந்தது. வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கும்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், 122 தொகுதிகளில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சதவீத வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானித்துள்ளன. 8 தொகுதிகளில் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளன. குறிப்பாக சென்னை தி.நகர் தொகுதியில் வெறும் 137 ஓட்டு தான் வெற்றி வித்தியாசம்.
எனவே, தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்களில் தகுதியானவர்கள், தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் யாருடைய ஆதரவாளர்களோ அதற்கேற்ப முடிவுகள் மாறக்கூடும். தவறுதலான நீக்கத்தால் வெற்றி தோல்வியே தலைகீழாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications