மற்ற பாடத்தில் அவங்க மார்க்கை பார்த்தீங்களா? 167 பேர் சென்டம் பெற்றது எப்படி? அன்பில் சொன்ன சீக்ரெட்
10th results 2025 Tamil Nadu: செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் வாங்கியிருப்பதால், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர்
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
சந்தேகம்
இதில் செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் வாங்கியிருப்பதால், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று விளக்கம் அளித்தார்.
அதில், தமிழ்நாட்டில் தேர்வுகள் கட்டுக்கோப்பாக நடக்கிறது. கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் பெற்றுள்ளனர். அவர்கள் நன்றாக படிக்க கூடியவர்கள்.
மற்ற பாடத்தில் அவங்க மார்க்கை பார்த்தீங்களா? நம்ம பிள்ளைகள் நன்றாக படித்தால் மட்டும் ஏன் இந்த சந்தேகம். ஏன் பாராட்ட மனம் வரவில்லை. ஏற்கனவே மத்த பாடங்கள்லயும் அந்த மாணவர்கள் 90 முதல் 98 மார்க் எடுத்துருங்காங்க.. கடந்த ஆண்டும் அந்தப் பள்ளி, நல்ல ரிசல்ட் குடுத்துருக்காங்க.. தொடர்ச்சியாக நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர்கள்தான் அவர்கள், இதன் காரணமாக பிளஸ் 2 வேதியியலில் ஒரே மையத்தில் 167 பேர் செண்டம் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று காலைதான் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
10ம் வகுப்பு தேர்வில் மாணவியர் 95.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 91.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது
சிவகங்கை - 98.31% | விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76% | கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61% பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications