10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கிறதா? மாணவர்கள் ஆர்வம்
சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுந்து வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 2023 வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.

அதேபோல, 11ம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன.. இந்தநிலையில், 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் கடந்த 8ம் தேதி வெளியாகிவிட்டது..
தேர்ச்சி விகிதம்: 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி எப்போது என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்தபடியே உள்ளன.. இதில், 8, 36,593 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.. தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும். மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.. மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது.
இயக்ககம் அறிவிப்பு: இந்த பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
அந்தவகையில் 10ம் வகுப்பு தேர்தவு முடிவுகளும் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருந்த நிலையில், மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது விடைத்தாள் திருத்தும் பணியும், கடந்த ஏப்ரல் 24ம் தேதியே துவங்கிவிட்ட நிலையில், மே 17ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்திருந்தது. முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பானது ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.. தேர்வுத்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
எப்போது ரிசல்ட்: இதனிடையே, இதற்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கடந்த வாரம் செய்தியாளர்கள் இதுகுறித்து எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியாகும் என்று கூறியிருந்தார்.. அப்படியானால், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், 17ல் வெளியாகுமா அல்லது 19ல்வெளியாகுமா என்ற குழப்பம் மாணவர்களிடம் எழுந்துவருகிறது.. இதற்கான உறுதியான அறிவிப்பும் விரைவில் இன்று நாளைக்குள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications