மொத்தம் 11 பேர்.. தனி வீட்டை வாடகைக்கு எடுத்து.. சுற்றி வளைத்த போலீஸ்.. மதுராந்தகத்தில் பரபரப்பு
மதுராந்தகம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 11 பேர் கைதாகி உள்ளன
செங்கல்பட்டு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 11 பேர் கொண்ட கும்பலை மதுராந்தகம் போலீசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் அடிக்கடி கஞ்சா கடத்துதல் போன்ற குற்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன..
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செங்கல்பட்டு அருகே வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்..

தனி வீடு
அந்த வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தும் வருகின்றனர்.. இந்நிலையில், மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில், தனியாக வீடு எடுத்து, ஒரு கும்பல் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா வியாபாரம்
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டை அதிரடியாக போலீசார் சுற்றி வளைத்தனர்.. அத்துடன், அதிரடியாக உள்ளே நுழைந்தபோது, அங்கே கஞ்சா விற்பனை நடப்பதையும் உறுதி செய்தனர்.. அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைக், ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்,... இதையடுத்து, அங்கிருந்த 11 பேர் கொண்ட கும்பலையும் கைது செய்தனர்.

11 பேர் கைது
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சங்கர் 24, ராமுடு 28, கார்த்திக் 28, பவுன் குமார் 24, சதீஷ்குமார் 34, பூமிநாதன் 24, விஜயகுமார் 29, சுபாஷ் 25, சங்கர் 25, சையத் முகமது இப்ராஹிம் 33 ஆகியோர் கைதாகி உள்ளனர்.. இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திரா, தமிழகம் பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மொத்தமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது..

விசாரணை
ஆனால், இவர்கள் எந்த பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, இப்படி விற்பனை செய்கிறார்கள் என்று தொடர்ந்து அந்த கும்பலிடம் விசாரித்து வருகிறார்கள்.. மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 60 கிலோ கஞ்சா எந்தெந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.. கஞ்சா சப்ளை செய்வதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு இந்த கும்பல் எடுத்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications