Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது.

தாழ்வு மண்டலம்

தாழ்வு மண்டலம்

பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டு உள்ளது.

வலிமை அடைந்தது

வலிமை அடைந்தது

இந்த நிலையில்தான் தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 2 நாட்களில் முழுமையாக நகர்ந்தது. ஆனால் இதனால் பெரிய மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்தது. அதை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் இன்று நகர கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கே நகரும்

எங்கே நகரும்

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கையில் கரை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. திரிகோண மலையில் இருந்து 100 கிமீ தூரத்தில் இது உள்ளது. அதோடு காரைக்காலில் இருந்து 240 கிமீ தூரத்தில் உள்ளது. இன்று மாலை இலங்கையில் திருகோணமலைக்கு அருகே இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து அதன்பின் வலிமை இழக்கும். இதனால் இலங்கையில் கனமழை பெய்ய போகிறது.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின் மழை பெய்யும். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+