"எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்?".. 11 எம்எல்ஏக்களிடமும் விசாரணையை துவக்கினார் சபாநாயகர்
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார்
சென்னை: "எடப்பாடி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தோம்" என்பது குறித்து சபாநாயகரிடம் 11 எம்எல்ஏக்களும் விளக்கம் அளித்து வருகிறார்கள்.. வீடியோ கான்பரன்ஸ் மூலம் தற்போது 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த 11 பேரை திமுக விடுவதாக இல்லை.. முக்கியமாக ஓபிஎஸ்ஸை ரவுண்டு கட்டி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் வரை சென்று 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சூடுகிளப்பி பரபரப்பாக்கியதே திமுகதான்.. அந்த வகையில், 11 எம்எல்ஏக்களிடம் கோர்ட் உத்தரவிட்டபடி, சபாநாயகர் தனபால் நாளை விசாரணை நடத்த உள்ளார்... வீடியோ கான்பரன்ஸ் மூலம் 11 பேரிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளாராம்.. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது!

2017-ல் ஆரம்பித்த இந்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கானது, இன்னும் நடந்து வருகிறது.. அன்று, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.. இவர்களை தகுதிநீக்கம் செய்ய கோரி அளிக்கப்பட்ட புகாரின் மீது சபாநாயகர் தனபாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தை திமுக அதிரடியாக கையில் எடுத்தது.. சென்னை ஹைகோர்டிலும் கேஸ் போட்டது.
இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது.. உடனே திமுக சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது.. புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி இந்த கேஸை நீதிமன்றம் முடித்து வைத்தது. பிறகு, ஓபிஎஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகரும் நோட்டீஸ் அனுப்பினார்.. அதோடு சரி, அது என்னவானது என்று தெரியவே இல்லை.
அதனால் திமுக மறுபடியும் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு போனது.. தீர்ப்பு சொல்லி 3 மாசமாகியும் சபாநாயகர் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் மனுவில் கூறியது.. இதையடுத்து, நீதிபதிகள் 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருந்தது. அத்துடன், 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடம் நாளை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார் என்று நேற்று செய்திகளும் வெளியாயின.. அதன்படி, 11 எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு மீது, சபாநாயகர் தனபால் தற்போது விசாரணையை நடத்தி வருகிறார்.. வீடியோ கான்பரன்ஸ் வழியாக 11 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய விசாரணைக்கு, புகார் அளித்த தினகரனுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, சோளிங்கர் எம்எல்ஏ பார்த்திபன், தகுதி நீக்க புகாருக்குள்ளாகி உள்ள, அமைச்சர் பாண்டியராஜன், சென்னை மைலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
'தொடர்ந்து, புகார் அளித்தவர்கள், துணை முதல்வர் உட்பட, மற்ற எம்எல்ஏ.க்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று சட்டசபை செயலக அதிகாரிகள் ஏற்கனவே சொல்லியிருந்த நிலையில், விசாரணை தற்போது நடந்து வருகிறது. ஓபிஎஸ்-க்கு எதிராக இந்த விசாரணையின் முடிவு அமையுமா என்பது இறுதியில்தான் தெரியவரும்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications