"கருகும்" தாமரை?.. ஸ்டாலினின் ராஜதந்திரம்.. இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. திகைக்கும் பாஜக & அதிமுக
திமுக வரும் எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவில் நடந்து வரும் சூழல்கள் திமுகவுக்கு சாதகமாகிவரும் நிலையில், எம்பி தேர்தலுக்கு தன்னை முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது திமுக..!
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு எப்படியும் காலதாமதமாகும் என்கிறார்கள்..
எம்பி தேர்தல் வரை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்று தெரிகிறது. எனினும், எடப்பாடியின் பிடிவாதம் திமுகவுக்கு பிளஸ் ஆகி கொண்டிருக்கிறது..

11 எம்எல்ஏக்கள்
ஓபிஎஸ்ஸுடன் சசிகலா, டிடிவி தினகரன் சேர்ந்தாலும் அந்த அளவுக்கு பிரயோஜனம் இருக்காது என்கிறார்கள்.. காரணம், அன்று 11 எம்எல்ஏக்களைவைத்துக் கொண்டு, ஜெ.சமாதியில் தியானம் செய்து கட்சியை உடைத்தவர் ஓபிஎஸ்தான் என்ற பிம்பம் இன்னமும் கட்சிக்குள் உள்ளது.. அதேபோல, சசிகலாவை அன்று வெளியே துரத்தியதும் ஓபிஎஸ்தான் என்பதையும், டிடிவி தினகரன் விரட்டியடித்தது ஓபிஎஸ்தான் என்பதையும், தொண்டர்கள் மறக்கவில்லை..

ரத்தத்தின் ரத்தங்கள்
போதாக்குறைக்கு, பொதுக்குழு அன்று கட்சி ஆபீசில் செய்த கலாட்டா, கோர்ட் வரை சென்றுவிட்டதையும் ரத்தத்தின் ரத்தங்கள் வேடிக்கை பார்த்தனர். எனவே, எடப்பாடி தனித்து செல்வாக்கை காட்டினாலும், அல்லது ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி இணைந்தாலும், பெரிய அளவுக்கு வாக்கு சதவீதம் தங்களுககு பாதிக்காது என்று திமுக கணக்கு போடுகிறது.. அதுமட்டுமல்ல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்த தீர்ப்பும் இனிமேல்தான் வரப்போகிறது.. எப்படியும் அந்த முடிவை எதிர்த்து ஓபிஎஸ் அப்பீல் போவார்.. எனவே, வழக்கின் தீர்ப்பு காலதாமதம் ஆகும்.. இந்த டைமிங்தான், திமுகவுக்கு அச்சாரமாக இருக்க போகிறது.

ரெய்டுகள்
ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால்தான் பிரச்சனை.. கொங்கு + தென்மண்டல வாக்குகளை திமுக இழக்கக்கூடும் அபாய உள்ளது.. எவ்வளவுதான், ஊழல் வழக்குகள், ரெய்டுகள் என கலக்கத்தை ஏற்படுத்தினாலும்கூட, ஒருவேளை ஆறுமுக கமிஷன் அறிக்கையை வைத்து, அரசியல் பிரச்சனையை, கிளப்பினாலும்கூட, அதிமுகவின் சாதி பல வாக்குகளை, திமுக தன் பக்கம் இழுக்குமா? என்பதும் சந்தேகம்தான் என்கிறார்கள்.. அதனால்தான், எம்பி தேர்தலுக்கான மும்முரத்தை தற்போதே தொடங்கிவிட்டதாம்.

முனுசாமி
எடப்பாடிக்கு தற்போது அதிமுக சாதகமாக இருந்தாலும், அவரது தலைமையிலான கூட்டணியை ஒருசிலர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.. குறிப்பாக அன்புமணி ஓபனாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்.. தர்மபுரி வளர்ச்சிக்கு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே உதவவில்லை என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.. ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு சீனியர்கள் கேபிமுனுசாமியும்சரி, சிவி சண்முகமும் சரி, 2 பேருமே இதுவரை பதில் சொல்லவில்லை.. அந்தவகையில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி பெருத்த பலத்துடன் இந்த முறை அமையாது என்கிறார்கள்.. இதுவும் திமுகவுக்கு பிளஸ் ஆகவே பார்க்கப்படுகிறது.

சக்ஸஸ் ஸ்டாலின்
ஒருவேளை, அதிமுக விவகாரம் முற்றிப்போய், இரட்டை இலை முடக்கப்பட்டால், திமுகவின் நம்பிக்கை தூண்களான செந்தில்பாலாஜி, நேரு போன்றோர்களை வைத்துக் கொண்டு, காங்கிரஸை கழட்டிவிடவும் திமுக முனையலாம் என்கிறார்கள்.. ஏற்கனவே காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கம் காட்டி வருவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், திமுக விரைவில் இந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.. ஆனால், தற்சமயம்வரை, ஸ்டாலினை மலை போல் நம்பி உள்ளது காங்கிரஸ் மேலிடம் என்றாலும், திமுக எந்த அளவுக்கு, காங்கிரஸை நம்பி களம் இறங்க போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருமாவளவன்
காங்கிரஸ் இல்லாத பட்சத்தில், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவை வைத்துக் கொண்டு, பாஜகவுடன் நேரடியாக மோதவும் திமுக தயாராகலாம்.. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை என்ற கணக்கில்தான் திமுக தற்சமயம் உள்ளதாக தெரிகிறது.. ஆக, இன்னும் கூட்டணி முடிவாகாத பட்சத்தில், சீட் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படாத பட்சத்தில், தேர்தல் அரசியல் கணக்குகள் இப்போதே வட்டமடிக்க துவங்கிவிட்டன..

கணக்குகள்
இனி வரும் நாட்களில் எடப்பாடியின் அரசியல் எந்த பக்கம் நகர போகிறது? கூட்டணி யாருடன் அமைய போகிறார்? திமுக என்ன செய்ய போகிறது? எல்லாவற்றையும்விட ஏகப்பட்ட "கணக்குகளை" போட்டுக் கொண்டிருக்கும் தாமரை கட்சி என்ன செய்ய போகிறது? என்பதைதான் உற்று கவனிக்க வேண்டி உள்ளது.. அதிமுகவின் மெஜாரிட்டியையும் விரும்பாமல், அதேசமயம் அந்த கட்சியும் உடையாமல் எப்படி கூட்டணிக்குள் கொண்டு செல்ல போகிறது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications