Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை வெயிலுக்கு "குட்பை.." கோவை உட்பட 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை! ரொம்ப ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது வங்கக் கடலில் மோச்சா புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் பருவநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படவே செய்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

 12 districts including Kovai will receive heavy rain today says Chennai Meteorological dept

இந்தாண்டும் கடந்த பிப். மாதம் முதலே வெப்பம் கணிசமாக அதிகரித்தது. இந்த கோடை காலத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

வானிலை: அதன்படி வெப்பமும் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், கடந்த சில காலமாக மாநிலத்தில் பல இடங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் கணிசமாக மழை பெய்தே வருகிறது. இந்தச் சூழலில் இப்போது வங்க கடலில் மோச்சா புயலும் உருவாகியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ":நேற்று (10.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.05.2023) காலை 05:30 மணி அளவில் "மோகா" புயலாக வலுப்பெற்று இன்று காலை 08:30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

மழை: அதன் பிறகு நாளை (12.05.2023) காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து (12.05.2023) மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13.05.2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14.05.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை (மே 12) முதல் மே 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்: அதேபோல அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை இன்று முதல் மே 15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.குறிப்பாக மே 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை ஆய்வும மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுருளக்கோடு (கன்னியாகுமரி) 50 மிமீ, மேட்டுப்பாளையம், கோவை தெற்கில் 40மிமீ மழை பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+