"சக்கரம் சுத்துதே".. இவ்ளோ துணிச்சல் "அங்கேகூட" இல்லயே.. அப்பட்டமான கார்ப்பரேட் மாடல்.. யார் பாருங்க
சென்னை: 12 மணி நேர வேலை திட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுதான் திராவிட மாடலா? என்று விவசாயிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.. அத்துடன், வேலை நேரத்தை அதிகரித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு துணை போகும் அப்பட்டமான கார்ப்பரேட் மாடலா? இது என்றும் திமுக அரசை விமர்சித்துள்ளது.
நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..

திமுக அரசு: தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தமிழக அரசு இன்று நிறைவேற்றியுள்ள 12 மணி நேர வேலை மசோதாவிற்கு காவிரி- வைகை - குண்டாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.அர்ச்சுனன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'பின்னோக்கி சுழலும் வரலாற்று சக்கரம்' என்ற தலைப்பில் அறிக்கை அவர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை: அந்த அறிக்கையில், " 12 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிந்து உழைப்பை சுரண்டிய முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து 8 மணி நேர வேலை. 8 மணி நேர ஓய்வு. 8 மணி நேர உறக்கம் என்ற உழைப்பவர்களின் உரிமைகுரல் முழங்கியது. இதனை வலியுறுத்தி 1886 மே 3-ம் தேதி அமெரிக்க சிகாகோ நகரில் நடந்த பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
தொழிற்சங்க தலைவர்கள் 7 பேர் தூக்குத்தண்டனை பெற்றனர். இதன்பின் பாரிஸ் நகரில் கூடிய சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் 1890 முதல் மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் உரிமை தினமாக கடைபிடிக்க முடிவு செய்தது. இந்தியாவில் முதல் முதலில் சென்னையில் 1923-ல் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.
12 மணி நேரம்: இந்நிலையில் சரியாக 100 ஆண்டுகள் கழித்து உலகில் எந்த ஒரு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும் செய்ய துணியாத, இந்தியாவில் மத்திய அரசோ வேறு மாநில அரசுகளோ கொண்டு வர முயலாத 12 மணி நேர வேலை திட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் தொழிலாளர் நல கொள்கையா? இல்லை, வேலை நேரத்தை அதிகரித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு துணை போகும் அப்பட்டமான கார்ப்பரேட் மாடலா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications