நெஞ்சே பதறுதே.. தலைக்கேறிய காமம்.. அடங்காத சபலம்.. மொத்தமா போச்சே.. இப்ப அந்த பிஞ்சு கர்ப்பம்.. ஷேம்

13 வயது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிகார தந்தை செய்த காரியத்தை பார்த்தீங்களா.. பெற்ற மகள் என்றும் பாராமல் கர்ப்பமாக்கி வைத்து, அந்த 13 வயது குழந்தையின் வாழ்க்கையை நாசமாக்கி உள்ளார்.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் அந்த நபர்.. 45 வயதாகிறது.. இவரது மனைவி, இவருடன் சண்டை போட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு முன்பு சென்றுவிட்டார். ஒரே ஒரு மகளையும் கணவரிடமே விட்டு சென்றுவிட்டார்..

அந்த மகள், தன் அப்பாவுடனேயே வளர்ந்து வந்தார்.. அவருக்கு இப்போது 13 வயதாகிறது.. ஆனால், அம்மா வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதால், அந்த சிறுமிக்கு மனநலம் பாதித்துவிட்டதாக தெரிகிறது.

 கண்ணீர்

கண்ணீர்

அந்த குடிகார தந்தை இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.. சொந்த மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்... ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சிறுமி, தன்னுடைய அப்பா செய்யும் இந்த கொடுமையை பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸ்வரை புகார் தந்துவிட்டனர்.. அப்போதுதான், இப்படி ஒரு விஷயம் இருப்பதே வெளிச்சத்துக்கு வந்தது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடந்த சம்பவத்தை நிரூபித்துள்ளனர்..

 107 வருஷம்

107 வருஷம்

இப்போது அந்த தந்தைக்கு 107 வருடங்கள் தண்டனை 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொடூர தண்டனை தந்தும்கூட சில மிருகங்கள் திருந்துவதில்லை.. இதோ நம் சென்னையிலேயே ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் அந்த 13 வயது சிறுமி... அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே மாதவிடாய் பிரச்சனை இருந்துள்ளது.. அதாவது குறிப்பிட்ட சில மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்று கூறப்படுகிறது.

கர்ப்பம்

கர்ப்பம்

மற்றொருபுறம், சிறுமியின் வயிறும் நாளுக்குநாள் பெரிதாகி கொண்டே இருந்தது... ஒருவேளை வயிற்றில் கட்டி இருக்குமோ என்ற பயத்தில், அந்த சிறுமியின் அம்மா பயந்துவிட்டார்.. அதனால், மகளை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்... அவரை பரிசோதித்த டாக்டர்கள், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து வருமாறு சொல்லி இருக்கிறார்கள்.. அந்தம்மாவும், மகளை அழைத்துக் கொண்டு, ஸ்கேன் எடுத்துள்ளார்.. அதில, தன்னுடைய மகள் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

 கேடுகெட்ட தந்தை

கேடுகெட்ட தந்தை

உடனே அங்கிருந்த டாக்டர்களும், இதுகுறித்து உடனடியாக திருவொற்றியூர் மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்... போலீசார் விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த சிறுமி ஒவ்வொரு விஷயத்தையும் போட்டுடைத்தார்.. பெற்ற அப்பாவே, மதுபோதையில் பலமுறை பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த கேடுகெட்ட தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 மாதவிடாய்

மாதவிடாய்

கடந்த சில மாதங்களாகவே மாதவிடாய் வராததால், சிறுமி தன் அம்மாவிடமே சொல்லி உள்ளார்.. இதனால், அம்மாவும் மகளை வேறு ஒரு டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்துள்ளார்.. உடலில் போதுமான ரத்தம் இல்லாததால், காலதாமதமாக மாதவிடாய் வரும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.. அதற்கு பிறகு வயிறு தெரிதாகவும்தான், வயிற்றில் கட்டி இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.. ஒவ்வொருமுறையும், இரவு நேரத்தில், குடிபோதையிலேயே மகளிடம் உடலுறவு கொண்டுள்ளார் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

 மஞ்சத்தாலி

மஞ்சத்தாலி

தவறு செய்பவர்களுக்கு போக்சோ சட்டம் உள்ளது என்றாலும், இந்த சட்டத்தினால் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றாலும்கூட, இதுபோன்ற காமுகர்களுக்கு பயம் எதுவும் இருப்பதில்லை.. அப்படியானால், போக்சோ இன்னும் கடுமையாக்கப்பட வேண்டுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. தேவைப்பட்டால், அந்த சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால் நல்லா இருக்கும்.. அத்துடன் இந்த மதுவிலக்கையும் அமல்படுத்தி, டாஸ்மாக்கையும் இழுத்து மூடினால், எத்தனையோ குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல இருக்கும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+