திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர், கடலூர், நாகை, மதுரை, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

14 districts will get moderate rain

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் மாலை குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்தது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழலே நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை எப்போது பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+