ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: துபாய் வழியாக விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலையங்களில் அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் கண்காணித்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாய் விமானத்திலிருந்து இன்று தமிழகம் வந்தவர்களை சுகாதாரத் துறையினர் தெர்மல் பரிசோதனை செய்தனர்.
அதில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து துபாய் வழியே விமானத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து 14 பேரும் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பு மற்றும் ரத்த பரிசோதனை மட்டுமே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என தெரியவரும். அதுவரை இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருவர் என கூறப்படுகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications