சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் பைக்கில் சென்றபோது கொடூரம்!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, மர்ம நபர்கள் இருவரால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நண்பருடன் பைக் ரைடு சென்ற 14 வயது சிறுமி மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் இரவு, தோழியின் வீட்டில் தங்கி விடுவதாக, 14 வயது சிறுமி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில், இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு அந்தச் சிறுவன், சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள கீழக்காண்டை கிராமம் நோக்கிச் சென்றுள்ளார். மதுராந்தகம் அடுத்த தேவத்துார் பகுதியில் இருந்து, மர்ம நபர்கள் இருவர் அந்தச் சிறுவனின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இதை அறிந்த அந்தச் சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அத்திவாக்கம் காட்டுப் பகுதி அருகே செல்லும்போது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. அப்போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரும் சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியை துரத்தி விட்டு, 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு துாக்கி சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, சிலரது உதவியால் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்த மருத்துவர்கள், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தும் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications