பண்ணையில் கொத்துக் கொத்தாக சரிந்த 140 கோழிகள்! அதிக பாட்டு சத்தத்தால் ஹார்ட் அட்டாக்! பின்னணி என்ன
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், காதை பிளக்கும் டி.ஜே இசைக்கு பலியாகி 140 கோழிகள் பண்ணையிலேயே உயிரிழந்த சம்பவம் தார்யபூர் கிராம மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. முகமது ஷபீர் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள், திருமண ஊர்வலத்தின் அதீத சத்தத்தை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
தார்யபூர் என்ற கிராமத்தில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது.. இங்கு சுமார் 5,000 கோழிகள் உள்ளன.. இந்த பண்ணைக்கு கொஞ்சம் தூரத்திலேயே கடந்த 25-ம் தேதி இரவு ஒரு கல்யாண ஊர்வலம் சென்றது.

கவி யாதவ் என்ற டி.ஜே ஏற்பாடு செய்திருந்த அந்த ஊர்வலத்தில், தரை அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அந்த இரைச்சல் பண்ணைக்குள் இருந்த கோழிகளை மிரளச் செய்தன.. இதனால் பதறிப்போன ஷபீர், ஓடிச் சென்று இசையை நிறுத்துமாறு கவி யாதவிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அவரது கோரிக்கையை துச்சமாக மதித்த டி.ஜே, ஊர்வலம் முடியும் வரை சத்தத்தை குறைக்கவே இல்லையாம்.. ஊர்வலம் கடந்த சில நிமிடங்களிலேயே பண்ணைக்குள் 140 கோழிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தன. இதனால் ஷபீருக்கு சுமார் 25,700 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நஷ்டஈடு தருவதாகப் பேசிய கவி யாதவ், பின்னர் அங்கிருந்து நழுவி தலைமறைவானார். இது தொடர்பாக ஷபீர் காவல் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினார்கள்..
இறந்த கோழிகளை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள், திடீரென ஏற்பட்ட அதிகப்படியான சத்தத்தால் கோழிகளுக்கு இதயம் செயலிழந்து அதாவது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கவி யாதவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்த இசை வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 15 டி.ஜே-க்களுக்கு போலீசார் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட சத்தமாக இசைக்கக் கூடாது என்றும், இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மிகத் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குக்காக வைக்கப்படும் சத்தம், வாயில்லா ஜீவன்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications