காலி ஆகுது சென்னை.. தீபாவளிக்கு கிளம்ப இப்பவே 10 லட்சம் பேர் ரெடி.. ஸ்பெஷல் ரயில்கள், பேருந்துகள்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, 11,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது... தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த தொடர் விடுமுறை காரணமாக, வெளியூர்களில் தங்கியுள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல தயாராகி வருகிறார்கள்.

வார விடுமுறை: வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காகவே, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கமாகும்.. அந்தவகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, 14 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பஸ்கள் அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்பட உள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்: சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என மூன்று மையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த வழித்தடத்தில் பேருந்துகள் செல்லும் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு திரும்பும் வகையில் நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 9,441 பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: அதேபோல, தெற்கு ரயில்வே சார்பில், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, செங்கோட்டை, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகம் முழுதும் வழக்கமாக இயக்கப்படும் 2,500 பஸ்களோடு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என, அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சொல்லும்போது, "
தீபாவளிக்கு ஏற்கனவே அறிவித்தபடி, சிறப்பு பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம். நெரிசலை தவிர்க்க, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் நிலையங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு பஸ்களில் பயணிக்க, 1.08 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அதிகாரிகள்: கடந்த தீபாவளிக்கு, சென்னையில் இருந்து அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த தீபாவளிக்கு 5.82 லட்சம் பேர் பயணம் செய்வர் என, எதிர்பார்க்கிறோம்"என்றனர்.
அதேபோல, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும், விரைவு ரயில்களோடு, 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை - திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி; தாம்பரம் - நாகர்கோவில்; சென்னை - கோவை வழித்தடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மூன்று லட்சம் பேர் வரை பயணிப்பர் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.
ஆம்னி பஸ்கள்: ஆம்னி பஸ்களிலும், சொந்த வாகனங்களிலும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரிகிறது. பெரும்பாலானோர் வரும் 28, 29ம் தேதிகளில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பயணியர் ஒரே நேரத்தில் செல்வதை தவிர்த்து, காலை முதலே செல்ல திட்டமிட்டு சென்றால், போக்குவரத்து நெரிசலில், பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications