அமைச்சருக்கு பொறுப்பு இருக்கு! அரசு பேருந்து நஷ்டத்துக்கு காரணம்? அதிமுகவை கோர்த்துவிட்ட வேல்முருகன்
சென்னை: 14வது ஊதிய நிர்ணய பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. இச்சூழலில், 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகம், ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது, நீடிக்கும் எரிபொருள் விலை உயர்வு, பொதுவான பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு நெருக்கடிகளில் போக்குவரத்து துறை சிக்கியுள்ளது.

அதிமுக அரசு
லாபகரமான வழித்தடங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களை அனுமதித்தது, மொஃபசல் வழித்தடங்களில் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்தது, அரசு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பயணச் சேவைகளை விரிவாக்கம் செய்ய அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மறுக்க முடியாது.

அமைச்சருக்கு பொறுப்பு
இந்த நிலையில், கடுமையான நிதி நெருக்கடி, ஊழியர் பிரச்சனைகளை களைவதில், போக்குவரத்து துறையின் அமைச்சர் சிவசங்கருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, போக்குவரத்து ஊழியர்களின் உரிமைகளை மறுப்பது என்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். போக்குவரத்து ஊழியர்களுக்கான படித்தொகை, ஊக்கத்தொகை பிரச்சினை, ஓய்வுபெற்றோர் பணப்பலன், 82 மாத அகவிலைப்படி நிலுவை தொகை, அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்குவது அரசின் முக்கிய கடமையாகும்.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள் லட்சக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், மாநிலத்தின் அன்றாட சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மிகப்பெரிய பங்கை வகித்துள்ளனர். ஆனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களின் பரபரப்பான, மனஅழுத்தமிக்க பணிக்காலத்திற்கு பின்னர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து கடுமையான நிதி நெருக்கடி சோகத்தில் மூழ்குகின்றனர். அவர்களின் பணிக் காலத்திலேயே கூட சட்டப்பூர்வமான ஊதிய மறு நிர்ணயம், ஆண்டு ஊதிய உயர்வு, மற்ற படிகள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றையே போராடித் தான் பெற வேண்டிய நிலை உள்ளது.

உரிமை இல்லை
ஓய்வு பெறும் ஊழியரின் ஓய்வுக்கால பலன்களை நிறுத்தி வைப்பதற்கு நிறுவனத்திற்கு யாதொரு உரிமையும் இல்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. எனவே, 14வது ஊதிய நிர்ணய பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது." என்று வலியுறுத்தியுள்ளார்.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications