15% வரிக் குறைப்பு பக்கா ப்ளான்! மொத்த லாபமும் போச்சு? தங்கப் பத்திரத்திற்கு மூடு விழா?
சென்னை: தங்கப் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்யும் SGB திட்டத்தை மத்திய அரசு நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆகவேதான் தங்கத்தின் மீதான சுங்க வரியை பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. கூடவே இந்த வரிக் குறைப்பால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்க உள்ளனர் என்றும் தெரியவருகிறது.
தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதைத் தவிர்த்து பங்குச் சந்தை மூலம் தங்கம் வாங்குவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான் Sovereign Gold Bonds. இதைச் சுருக்கமாக SGB என்று சொல்வார்கள்.

தனிநபர், குடும்பம் அல்லது அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசால் Sovereign Gold Bonds என்ற திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தத் தங்கப் பத்திரங்கள் கிராம் அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்சமாக ஒரு கிராம் கூட முதலீடு செய்யலாம். அது முதிர்ச்சி அடைய எட்டு ஆண்டுக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடையில் வட்டியும் கிடைக்கும். ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு இத்திட்டத்தை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள் பங்குகளை விற்பனை செய்துவிடலாம்.
இந்த SGB திட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் நிலையான வருடாந்திர வட்டி விகிதமான 2.5% பெறலாம். அரை வருடத்திற்கு ஒருமுறை இது வழங்கப்படும். திட்டம் முதிர்ச்சி அடையும் போது அன்றைய சந்தை மதிப்பில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும். அப்படி விற்கப்படும் போது லாபமாகக் கிடைக்கும் பணத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு வருமான வரி பிடிக்க மாட்டார்கள்.
ஒருவேளை இத்திட்டத்தின் பலனாளிகள் இடைக்காலத்தில் ஏதேனும் அவசர பணத் தேவை என்றால் பத்திரத்தை வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, மக்களிடம் இதன் மீது ஒருவித கவர்ச்சி நிலவி வந்தது. வருமான வரி செலுத்துவோர், ஓய்வூதியம் பெறுபவர்கள், நிறுவனங்கள் எனப் பலரும் இதில் முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசின் 2024 பட்ஜெட்டிற்கு பிறகு கிடைத்துள்ள நியூஸ் 18 செய்தியின்படி, அரசு சவரன் கோல்டு பாண்டு (SGB) திட்டத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. மேலும் இத்திட்டத்தை அரசு நிறுத்த முயற்சி எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 15% இருந்து 6% குறைத்ததால் இந்த முடிவை அரசு எடுக்க உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வரியைக் குறைத்ததே தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கத்தான் என்றும் சொல்கிறார்கள். வட்டி விகிதம் குறையும் போது இயல்பாகவே முதலீடு செய்தவர்கள் வெளியேறிவிடுவார்கள் என அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே வரிக் குறைப்புக்குப் பிறகு, தேசிய பங்குச் சந்தையில் SGB விலைகள் 2% இருந்து 5% ஆகக் குறைந்திருக்கிறது.

கடந்த காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15% வரி விதிக்கப்பட்டிருந்தது. அதில் 10% அடிப்படை சுங்க வரியாகும். மீதமுள்ள 5% விவசாய உள்கட்டமைப்பை மேம்பாட்டுக்காகப் போடப்பட்ட செஸ் ஆகும். இந்த வரிக் குறைப்பால் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சியடைந்துள்ளது.
அதாவது அதன் விலை ரூ.4,000க்கு மேல் குறைந்து ரூ.68,900 ஆகியுள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) எஸ்ஜிபி விலை 2% இருந்து 5% குறைந்துள்ளது. உதாரணமாக, SGBAUG24 2.6 சதவீதம் சரிந்து ஒரு யூனிட்டுக்கு ரூ. 7,275 ஆக இருந்த அதே நேரத்தில் SGBDEC2513 இல் மிகவும் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது 5.98% குறைந்து ரூ.7,550 ஆனது.
கடந்த 2015 நவம்பர் 30 அன்று விற்கப்பட்ட SGB பங்குகள் வரும் நவம்பர் 2023 இல் முதிர்ச்சி அடைய உள்ளது. பணம் போட்டவர்கள் அதனைத் திரும்ப எடுப்பதற்கான காலம் கனிந்துள்ளது. அந்த நேரம் பார்த்து இந்த வட்டியைக் குறைத்து தங்கத்தின் விலையில் ஒரு வீழ்ச்சியை அரசு செயற்கையாகச் செய்துள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள். அதேபோல ஆகஸ்ட் 2016 இல் வெளியிடப்பட்ட SGB திட்டம் 2016-17 தொடர் I இல் முதலீடு செய்தவர்கள், 2024 ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதை எடுக்க உள்ளனர்.
கடந்த 2016-17 தொடர் I இல் ஒரு பங்கின் அசல் விலை ரூ. 3,119 என இருந்தது. அதன் ஆண்டு வட்டி விகிதம் 2.75% ஆக இருந்தது. இப்போது மத்திய அரசு சுங்கவரி குறைத்ததால் பெரிய அளவுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் குறைந்துபோய் உள்ளது. ஆகவே, முதலீட்டாளர்கள் நஷ்டத்தை அடைய உள்ளனர். கூடவே திட்டமும் நிறுத்தப்படலாம் என்பதால் கவலையில் உள்ளனர்.
இது பற்றி பேசிய ஆனந்த் சீனிவாசன், "ஆதித்யா பிர்லா கம்பெனி பெயிண்ட் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், இப்போது ஜுவல்லரி தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 4 கடைகளை முதலில் தொடங்கப் போகிறார்கள். 6 மாதங்களில் அதை 10 கடையாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் ஜுவல்லரி மார்க்கெட் 11 லட்சம் கோடியிலிருந்து 13 லட்சம் கோடியாக 2030க்குள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, 5 ஆயிரம் கோடியை முதலீடு செய்து ஆதித்யா பிர்லா நகைக்கடை வியாபாரத்தில் இறங்க உள்ளது. இதுவரை அவர்கள் தொடங்கிய சில தொழில்கள் மக்களிடம் தோல்வியை சந்தித்துள்ளது. டாடா நிறுவன தயாரிப்பு பொருட்கள் மீதுள்ள நம்பிக்கை பிர்லா பொருட்கள் மீது இல்லை.
ஆகவே, இதை மனதில் வைத்துத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் விலையைக் குறைத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. இதை நான் சொல்லவில்லை. அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள். தங்க மார்க்கெட்டில் டாடா நிறுவனம் பலமாக உள்ளது. அதை எதிர்த்து நின்று பிர்லா நிறுவனம் சமாளிக்குமா என்று மிகப்பெரிய கேள்வி” என்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications