Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிபதி GR சுவாமிநாதன் மீது எந்​த குறை​மில்லை! நேர்​மை, நாண​யம் மிகுந்தவர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீதான பதவி நீக்க தீர்மானத்தை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த நீதிபதிகள் உள்ளிட்ட 154 வழக்கறிஞர்கள் மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

GR Swaminathan Thirupparankundram parliament

திருப்பரங்குன்றம் மலை

அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை நீதிபதி வழங்கி வருகிறார் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றம்சாட்டி இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.

இம்பீச்மென்ட் நோட்டீஸ்

இந்த நிலையில் அவர் மீதான பதவி நீக்க தீர்மானத்தை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த நீதிபதிகள் உள்ளிட்ட 154 வழக்கறிஞர்கள் மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர்களான அனந்தபத்மநாபன் பழனிவேல் ராஜன் சீனிவாச ராகவன் கதிர்வேலு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

அந்த கடிதத்தில்," நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. முற்றிலும் தவறானவை. இவ்வகையான நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடியான அச்சுறுத்தலாக அமையும் .அதனால் பதவி நீக்க தீர்மானத்தின் தகுதிகளை ஆய்வு செய்வதே தவிர்க்கப்பட வேண்டும். சில எம்.பி.க்களின் செயல்பாடுகள் அரசியலமைப்பு அதிகாரங்களை மீறும் வகையிலும், அவற்றை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தும் முயற்சியாகவும் உள்ளது.

வழக்கறிஞர்கள் கடிதம்

அரசியலமைப்புச் சட்ட விதிகளை தனிச்சையாக பயன்படுத்த முயல்வதன் மூலம், இந்திய நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர் குலைக்க முயற்சி நடைபெறுகிறது. அதன் விளைவாகவே இந்த பதவி நீக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 30 வரை, சுமார் 1.26 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு வழங்கியுள்ளதாகவும், நீதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இன்றி, நேர்மையாகவும், அறநெறியுடனும் செயல்பட்டு வந்துள்ளார்.

பதவி நீக்க தீர்மானம்

அவர் மீது எந்த விதமான குறையும் சுமத்த முடியாது என்றும், அவர் நேர்மை, நாணயம் மற்றும் அறிவாற்றல் கொண்ட நீதிபதிகளில் ஒருவர். அவர்மீது அரசியல் மற்றும் மத அடிப்படையிலான காரணங்களால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது கவலைக்குரிய விஷயம். இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடுகளுக்கு, குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான முயற்சி. இது ஜனநாயகத்தின் இரண்டு முக்கிய தூண்களான நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான "லட்சுமண ரேகையை" மீறிய செயல்

நீதித்துறை சுதந்திரம்

ஜனநாயகத்தின் உயர்ந்த கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மை மீது நம்பிக்கை இல்லாத சில அரசியல் கட்சிகளின் முயற்சியே இந்த பதவி நீக்க தீர்மானம். இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரித்து, சட்டத்தின் மாண்பையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றும் மக்களவைத் தலைவரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+