சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம்.. காவல் ஆணையர் உத்தரவு.. பரபர பின்னணி!
சென்னை: கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, சென்னையில் 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பதும், குற்றச் செயல்களைத் தடுப்பதும் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவலர்கள் ஒவ்வொருவரும் போதைப் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர் மாற்றம் செய்ய வேண்டும் என ஏற்கெனவே சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் உட்பட 22 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாக, சென்னையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் 15 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், காவல் உதவி ஆய்வாளர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
1. கார்த்திக் : காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஓட்டேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்.
2. ஜானி செல்லப்பா : பெரியமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
3. தீபக் குமார் : வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
4. ராஜேஷ் : ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
5. விஜயகாந்த் : புழல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
6. ரத்னகுமார் : திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
7. பிரியதர்ஷினி : சென்னை பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர்.
8. மாரியப்பன் : ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
9. தவமணி : வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
10. ரவி : ஆர்கே நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
11. ரமேஷ் கண்ணன் : கோயம்பேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
12. சிவக்குமார் : மாதவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
13. பூபதிராஜ் : விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
14. தேவராஜூ : கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
15. ராஜேஷ் : காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
16. ஜானகிராமன் : புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications