சென்னை பீச் டூ தாம்பரம் போறீங்களா! கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க! ரயில்வே நிர்வாகம் மேஜர் அறிவிப்பு
சென்னை: தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான 16 புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் சிலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, "சென்னை, தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்திலும் இரவு 9 முதல் 12 மணி வரையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் செங்கல்பட்டு, திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் 4 மின்சார ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அவர்களின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 9.10, 9.20, 9.40, 10.05, 10.30, 11.00, 11.59 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. பல்லாவரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 9.55, 10.10. 10.30, 10.50, 11.15, 11.45 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். மேலும் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10.15, 10.45 மற்றும் 11.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications