சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஹைகோர்ட் & மதுரை பெஞ்சில் ஆஜராக போகும்.. தமிழக அரசின் 17 புதிய வழக்கறிஞர்கள்.. அதிரடி தேர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு சார்பாக சென்னை ஹைகோர்ட் மற்றும் மதுரை பெஞ்சில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு துறையிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. புதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் வெவ்வேறு துறைகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

17 list of advocates appointed for Tamilnadu Government in Chennai High Court and Madurai bench

கண்டிப்பான அதிகாரிகள் பலருக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக சென்னை ஹைகோர்ட் மற்றும் மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 17 வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னை ஹைகோர்ட்டில் சிவில் வழக்குகளில் தமிழக அரசு சார்பாக ஆஜராகும்

வழக்கறிஞர்கள்வழக்கறிஞர் பி முத்துக்குமார்

வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன்

வழக்கறிஞர் சி ஹர்ஷா

வழக்கறிஞர் எஸ் ஜான் ஜே ராஜா சிங்

வழக்கறிஞர் ஒரு ஷப்னம் பானு

அதன்படி சென்னை ஹைகோர்ட்டில் கிரிமினல் வழக்குகளில் தமிழக அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர் ஏ தாமோதரன்

வழக்கறிஞர் ஆர் முனியப்பராஜ்

வழக்கறிஞர் ஜே.சி.தூராய்ராஜ்

வழக்கறிஞர் இ ராஜ் திலக்

வழக்கறிஞர் எல் பாஸ்கரன்

வழக்கறிஞர் ஒரு கோபிநாத்

அதன்படி சென்னை ஹைகோர்ட் மதுரை பெஞ்சில் சிவில் வழக்குகளில் தமிழக அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள்

மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன்

வழக்கறிஞர் பி தில்குமார்

வழக்கறிஞர் ஆர் பாஸ்கரன்

வழக்கறிஞர் ஏ.கே.மணிக்கம்

அதன்படி சென்னை ஹைகோர்ட் மதுரை பெஞ்சில் கிரிமினல் வழக்குகளில் தமிழக அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர் எஸ்.ரவி

வழக்கறிஞர் எம் முத்து மாணிக்கம்

இந்த மாத தொடக்கத்தில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தமிழகத்தின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது புதிய வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் நிரந்தர வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.

English summary
17 list of advocates appointed for Tamilnadu Government in Chennai High Court and Madurai bench of the high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X